என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சங்கக்கரா 14234 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருந்தார்.
    • விராட் கோலி 54 ரன்கள் அடித்தபோது, சங்ககரா ரன்களை கடந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ரன் அடித்து, அப்பாடா., டக்அவுட்டை கடந்து விட்டேன் என கையை காட்டினார்.

    ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் டக்அவுட்டை தாண்டிய விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

     இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்தது.

    விராட் கோலி 54 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த சங்ககராவை பின்னுக்கு தள்ளினார். சங்ககரா 14,234 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • வீராங்கனைகள் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அத்துமீறல்.
    • ஆஸ்திரேலிய அணி மானேஜர் புகார் அளிக்க, போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    மகளிர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை இங்கே ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்றது. இன்று தனது கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி போட்டி முடிந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்து மறுநாள், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இருவர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அவர்கள் அருகில் வந்த வாலிபர், விரும்பத்தகாத வகையில் தொட்டுள்ளார். வீராங்கனைகள் சுதாரிப்பதற்குள் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பி சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இரு வீராங்கனைளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து, போலீசார் குற்றவாளியை பிடித்துள்ளனர்.

    • பெர்த் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
    • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி விமர்சனத்திற்கு உள்ளானார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆவார்.

    இதனால் விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான் 3ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவரை மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.

    ஹசில்வுட் வீசிய ஓவரை விராட் கோலி எதிர்கொண்டார். முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்தார். வேகமாக ஒரு ரன் எடுத்த நிலையில், கையை தூக்கி அப்பாடா ஒரு ரன் அடித்துவிட்டேன் என்பதுபோல், காண்பித்தார். ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் எழுப்பி விராட் கோலிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    • அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
    • இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    ஆசிய கோப்பையை முறைப்படி ஒப்படைக்க ஒரு தனி விழாவை நடத்த வேண்டும் என்றும், அதில் இந்திய வீரர் யாராவது நேரில் வந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நக்வி பிடிவாதமாக இருந்தார்.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையை மோஷின் நக்வி அபுதாபியில் ரகசிய இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் கோப்பையை எடுத்து சென்றுள்ளார். அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) அதிகாரி ஒருவர் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கு ஆசிய கோப்பை இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அங்குள்ள ஊழியர் ஆசிய கோப்பை இங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது என்றும், தற்போது அது அபுதாபியில் நக்வியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த மாதம் 28-ந்தேதி ஆசிய கோப்பையை வென்றது. ஆனால் கிட்டதட்ட 1 மாதமாகியும் ஆசிய கோப்பை இன்னும் வழங்கப்படவில்லை. 

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இப்போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயஸ் அய்யர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் ஷ்ரேயஸ் அய்யருக்கு வயிற்றில் அடிபட்டது. இதனை தொடர்ந்து வலிதாங்க முடியாமல் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

    சேஸிங்கில் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங் செய்ய வருவாரா மாட்டாரா என்பது அவரது காயத்தை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாளையுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது.
    • 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை வாய்ப்பை இழந்து வெளியேறின.

    இந்தூரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். நாளையுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. நாளை 2 போட்டிகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து (விசாகப்பட்டினம்) அணிகளும், மாலை 3 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகளும் (மும்பை) மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் இலங்கை (59 ரன்), பாகிஸ்தானை (88 ரன்) வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (3 விக்கெட்), இங்கிலாந்து (4 ரன்), அணிகளிடம் தோற்றது. 6-வது போட்டியில் நியூசிலாந்தை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது.

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் , ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
    • 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இன்றைய போட்டியில் மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின்பு அந்த பந்தை அம்பயரிடம் தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தற்போது வரை ஆஸ்திரலியா அணி 44 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்துள்ளது. 

    • ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
    • 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில், விராட் கோலி முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "விராட் கோலியின் ஃபார்ம் முக்கியமானது. அவர் முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் . ஏனென்றால் அவர் அதை செய்துவிட்டால் போதும், அவரை தடுத்து நிறுத்த முடியாமல் எதிரணி திணறும்" என்று தெரிவித்தார். 

    • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்த டாஸ் தோல்வியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.

    இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.
    • இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    பலமுறை மழை குறுக்கிட்டதால் பெர்த் ஒரு நாள் போட்டி 26 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா 136 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது அரைசதத்தால் 264 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் போராடி அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூ ஷார்ட்டுக்கு (74 ரன்) இந்திய பீல்டர்கள் இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது பின்னடைவாக அமைந்தது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    • கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
    • ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.

    வியன்னா:

    ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.

    இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை

    படைத்துள்ளார்.

    முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

    ×