என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
    X

    கடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் , ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    Next Story
    ×