என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடந்த 18 வருடத்தில் முதல் முறை.. பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா
    X

    கடந்த 18 வருடத்தில் முதல் முறை.. பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

    • முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்துசாமி 89, ஸ்டப்ஸ் 76, ரபாடா 71 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 73 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்து வராலாற்று சாதனை படைத்துள்ளது.

    Next Story
    ×