என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அஸ்வினுக்கு பதில் மற்றொரு தமிழக வீரரை எடுக்கும் சிஎஸ்கே? வெளியான குட் நியூஸ்
- ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.
அதற்கு குஜராத் அணியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சிஎஸ்கே அணியிடம் பெரிய டிமாண்ட் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரப்பட்டால், அது சேப்பாக்கம் பிட்சில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும்.






