என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
    • பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதலிண்டு போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிஷன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

    இருப்பினும் அதை மறுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் டிராவிட் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ஆனால் அவர் கூறியதற்கு நேர்மாறாக ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்ட் அணிக்கு விளையாட இஷான் கிஷன் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை. குஜராத்துக்கு சென்று அங்குள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    அங்கே ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அவர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை இஷான் கிஷன் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு தயாராக இருக்கும் போது ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்காமல் இஷான் கிஷன் இப்படி நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை.
    • முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

    முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் யார் யார் விளையாடுவார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. முக்கியமாக விராட் கோலி விளையாடுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது. அதில், இந்திய அணிக்கு எப்போது திரும்ப வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கோலி இன்னும் எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது முடிவு செய்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் இருக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கிரிக்கெட் போட்டிகளில் கோலி இருந்தால், அந்த போட்டியை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். அவர் கொடுக்கும் ரியாக்ஷன், பீல்டிங், ஆட்டம், என சொல்லி கொண்டே போகலாம். அவர் இல்லாதாது அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம்.

    கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாட வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 27-22 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தி 13-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் புனே 40-31 என்ற கணக்கில் பெங்களூரை தோற்கடித்தது.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்கால் 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன. அரியானா 11-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    ஜெய்ப்பூர், புனே அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதாஸ் வாய்ப்பை இழந்துவிட்டன.

    • டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
    • நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.

    1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறது
    • தமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

    எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.

    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது சமி விலகினார்.
    • முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அவர் இந்த தொடரில் இல்லாதது வருத்தமான விஷயம் தான்.

    இந்நிலையில் முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமி கூறியது, இது மிகவும் கடினமான கேள்வி. சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது என்றால் மற்றவருடன் ஒப்பிடுவது போல இருக்கும். அது தவறாக மாறிவிடும். உலகில் வெற்றிகரனமான கேப்டன் யார் என்று கேட்டால் அது டோனி என்று சொல்லுவேன். அவரை போல யாரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்று சமி கூறினார்.

     

    டோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை.
    • இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோலி அடுத்த 3 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

    • வில்லியம்சன் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
    • வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும் கனே வில்லியம்சன் சதமும் விளாசினார். இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    349 ரன்களுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் சதம் மூலம் 179 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 529 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் இரட்டை விளாசிய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்சை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.

    ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன். அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்.

    என்று ரச்சின் கூறினார். 

    • முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்தது.
    • இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 45 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 29.3 ஓவர்களில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் கள நடுவர்களாக கிளாரி போலோசாக், எலோயிஸ் ஷெரிடன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது 23-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கார்ட்னர் வீசினார். அப்போது சுனே லூசுக்கு எல்பிடபிள்யூ அப்பில் கேட்டக்கப்பட்டது. கள நடுவரான கிளாரி போலோசாக் நாட் அவுட் கொடுத்தார்.

    உடனே ஆஸ்திரேலியா தரப்பில் ரிவ்யூ கேட்கப்பட்டது. முடிவில் பந்து ஸ்டெம்ப்பின் ஆப் திசையில் சென்றது. இது மைதானத்தில் இருந்த திரையில் தெளிவாக தெரிந்தது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சோகமாக சென்றனர். தென் ஆப்பிரிக்கா வீராங்கனை சந்தோஷத்தில் நகர்ந்தனர். அந்த நிலையில் உடனே நடுவர் கிளாரி போலோசாக் யாரும் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார். இதனால் மைதானத்தில் இருந்த வீராங்கனைகள் சிரித்தனர். இதனை உணர்ந்த நடுவர் சிரித்து கொண்டே முடிவை மாற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் டோனி பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஐபிஎல் தொடங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தியாவில் வரும் மார்ச் 22-ம் தேதி 17-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடபடவில்லை. இருந்தாலும் ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு டோனி சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். டோனி ஒரு குழந்தையை கொஞ்சியது அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

    ×