என் மலர்
விளையாட்டு
- முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ரன்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலிஸ் 39 ரன்னும், டிம் டேவிட் 37 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 43 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
சிட்னி:
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலிஸ் 39 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட், மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கும் மேல் குவித்தது. டிம் டேவிட் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- 5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றது.
- நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
டாக்கா:
5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் போட்டி முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதையடுத்து, சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.
இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய 'டாஸ்' முறையை கொண்டு வந்தனர்.
டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.
அதன்பின் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.
- விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
- விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர் என டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐ-யும் இது குறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விராட் கோலியின் விலகலுக்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
எஞ்சிய 3 டெஸ்டிலும் கோலி விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி- அனுஷ்கா சர்மா (கோப்புப்படம்)
இந்த நிலையில் விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்து விட்டேன் என்று டி வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. அதே நேரத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். விராட் கோலி குறித்து உண்மையில்லாத தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன்.
அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் வலிமையாகவும், சிறப்பாகவும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
- இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது.
புதுடெல்லி:
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
முதல் 2 டெஸ்டிலும் உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராட்கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காரணத்தை கூறவில்லை.
விராட்கோலியின் மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே 3-வது மற்றும் 4-வது டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. கடைசி டெஸ்டிலும் ஆடுவதில் உறுதியில்லை. ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாத நிலை இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்டுகளில் விராட்கோலி விளையாடமாட்டாரா? என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே இருக்கிறது. ஆனால் அவர் அடுத்து வர உள்ள போட்டிகளில் விளையாட போவதில்லை என்று பேசப்படுகிறது. அவர் எஞ்சிய 2 டெஸ்டில் ஆட போவதில்லையா அல்லது 3 போட்டிகளும் விளையாடவில்லையா போன்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
எஞ்சிய டெஸ்டுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. அணியில் வீராட்கோலி இடம் பெறவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப் பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் இழப்பாக அமையும்.
மேலும் விராட்கோலி ஆடாமல் போனால் உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
விராட்கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 15 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அவரது முன்னுரிமையை நான் மதிக்கிறேன்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது. முதல் 2 போட்டிகள் சிறப்பானதாக இருந்தது.
இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
- எதிஹாட் ஏர்வைஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஏர்லைன் நிறுவனமாக உள்ளது.
- 2024 சீசனில் இருந்து சிஎஸ்கே ஜெர்சியில் ஏதிஹாட் ஏர்வேஸ் பெயர் இடம் பெறும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்ல 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 2024 சீசனில் விளையாடும் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.
ABSOLUTE FANFARE! Superfans happy aa? ??#WhistleParakkattum pic.twitter.com/C71mIuzS2v
— Chennai Super Kings (@ChennaiIPL) February 8, 2024
இதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது எதிஹாட் ஏர்வைஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளதை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.
வீரர்களின் ஜெர்சியின் பின்பக்த்தில் அவர்களுடைய நம்பர்களுக்கு மேல் இனிமேல் எதிஹாட் ஏர்வைஸ் இடம் பிடித்திருக்கும்.
- மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.
- இந்த தொடரில் இந்திய அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புவனேஸ்வர்:
மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி, தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்டுள்ளது.
இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நிலையில், இந்திய அணி நாளை அமெரிக்காவுடன் மோத உள்ளது.
- பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா வருகிற 11-ந் தேதி மோதுகிறது.
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். களமிறங்கிய 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியான் ஹிக்ஸ் 0 ரன்களிலும் நடையை கட்டினார்.
இதனால் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனையடுத்து ஆலிவர் பீக்- ஹாரி டிக்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய ஹாரி டிக்சன் அரை சதம் விளாசி அவுட் ஆனார். ஆலிவர் பீக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இறுதியில் கைவசம் 1 விக்கெட் மீதி இருந்தது. 16 ரன்கள் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரப்பரப்பில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.
- ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.
- ரோகித்- பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில் இந்த தொடரின் 17-வது சீசன் எப்போது நடக்கும் என்பதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை எனபது சரியாக தெரியவில்லை.
ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோகித் கேப்டனாக செயல்படாதது குறித்து பேட்டியளித்தார். இதற்கு ரோகித்தின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்தது பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு கூட ஆகாத நிலையில் ரோகித் - பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான செய்தி வதந்தி எனவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததில்லை என்று சிலரும், ரோகித்தை பின்தொடர்வதை நிறுத்தியது ஹர்திக் தான் என்றும் சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
- பாகிஸ்தானின் அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஆகியோர் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
- யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.
புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு பிளாண்டர் கூறினார்.






