search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி ஆடாதது மிகப்பெரிய இழப்பு - உசேன்
    X

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி ஆடாதது மிகப்பெரிய இழப்பு - உசேன்

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
    • இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    முதல் 2 டெஸ்டிலும் உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராட்கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காரணத்தை கூறவில்லை.

    விராட்கோலியின் மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே 3-வது மற்றும் 4-வது டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. கடைசி டெஸ்டிலும் ஆடுவதில் உறுதியில்லை. ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாத நிலை இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்டுகளில் விராட்கோலி விளையாடமாட்டாரா? என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே இருக்கிறது. ஆனால் அவர் அடுத்து வர உள்ள போட்டிகளில் விளையாட போவதில்லை என்று பேசப்படுகிறது. அவர் எஞ்சிய 2 டெஸ்டில் ஆட போவதில்லையா அல்லது 3 போட்டிகளும் விளையாடவில்லையா போன்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

    எஞ்சிய டெஸ்டுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. அணியில் வீராட்கோலி இடம் பெறவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப் பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் இழப்பாக அமையும்.

    மேலும் விராட்கோலி ஆடாமல் போனால் உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

    விராட்கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 15 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அவரது முன்னுரிமையை நான் மதிக்கிறேன்.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது. முதல் 2 போட்டிகள் சிறப்பானதாக இருந்தது.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    Next Story
    ×