search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    U19 2-வது அரையிறுதி: டாம் ஸ்ட்ரேக்கர் அபார பந்து வீச்சு- பாகிஸ்தான் 179 ரன்னில் ஆல் அவுட்
    X

    U19 2-வது அரையிறுதி: டாம் ஸ்ட்ரேக்கர் அபார பந்து வீச்சு- பாகிஸ்தான் 179 ரன்னில் ஆல் அவுட்

    • பாகிஸ்தானின் அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஆகியோர் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×