என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்தது போல 2-வது இன்னிங்சில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சதத்தை (109 ரன்) பதிவு செய்தார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைடெஸ்ட் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 529 ரன் இலக்காக இருந்தது.

    முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்தது போல 2-வது இன்னிங்சில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சதத்தை (109 ரன்) பதிவு செய்தார்.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.

    5-வது வரிசையில் ஆடிய டேவிட் பெடிங்காம் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 87 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் இணைந்து நிலைத்து நின்ற பீட்டசன் 16 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 247 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைடெஸ்ட் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • டி. நடராஜனை 11.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
    • ஆர். சஞ்சய் யாதவை 22 லட்சம் ரூப்ய் கொடுத்து திருச்சி அணி எடுத்துள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஏற்கனவே அணியில் விளையாடிய ஜி. பெரியசாமியை 8.8 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

    மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

    1. ஆர். விவேக் (ரூ. 11 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    2. எஸ். ஹரிஷ் குமார் (ரூ. 15.4 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    3. ஆர். சஞ்சய் யாதவ் (ரூ. 22 லட்சம்)- திருச்சி கிராண்ட் சோலாஸ்

    4. டி. நடராஜன் (ரூ.11.25 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    5. சந்தீப் வாரியார் (ரூ. 10.5 லட்சம்)- திண்டுக்கல் டிராகன்ஸ்

    6. சாய் கிஷோர் (ரூ. 22 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    • கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் அடித்துள்ளார்.

    30 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்பினார். ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வரும் அவர் ஏழு இன்னிங்சில 365 ரன்கள் அடித்துள்ளார்.

    தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் "நான் இந்திய அணியில் இல்லாததை கவலையாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.

    தற்போது என்னுடைய பணி ரஞ்சி தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். எனக்கும் அணிக்கும் இந்த சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய லட்சியம் அதிக ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்" என்றார்.

    ஹனுமா விஹாரி 2018-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார். அதில் முறையே 22 மற்றும் 11 ரன்கள் அடித்தார்.

    இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் அடித்துள்ளார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
    • லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களை குவித்தார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். 

    இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    என்று சேவாக் கூறினார்.

    • டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்தது.
    • சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு மொஹ்சின் நக்வி கூறினார்.

    • தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
    • முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    பெனோனி:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்டோல்க் 14 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டேவிட் டீகர் டக் அவுட் ஆனார்.

    இதையடுத்து லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் உடன் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக அடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்னிலும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதையடுத்து களம் இறங்கிய ஆலிவர் வைட்ஹெட் 22 ரன், திவான் மரைஸ் 3 ரன், ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் -குல்கர்னி களமிறங்கினர். முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த முசீர் கான் 4 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனையடுத்து குல்கர்னி - முசீர் கான் ஜோடி நிதானமாக விளையாடியது. குல்கர்னி முதல் ரன் எடுப்பதற்கு 8 பந்துகளும் முசீர் கான் முதல் ரன் எடுப்பதற்கு 6 பந்துகளும் தேவைப்பட்டது. நிதானமாக விளையாடிய குல்கர்னி 30 பந்துகள் சந்தித்து 12 எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரியன்ஷு மோலியா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 போட்டிகள் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுகிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

    2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

    • இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
    • கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரோகித் ரசிகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள்.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவுச்சர் கூறியதாவது:-

    இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. பாண்டியாவை ஒரு வீரராக முதலில் நாங்கள் வாங்க நினைத்தோம். தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இதனால்தான் நாங்கள் புதிய கேப்டனை நியமித்துள்ளோம்.

    இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோகித் விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும். ரோகித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ரோகித் சர்மா ஒரு மிக சிறந்த நபர். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார்.

    கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இருப்பினும் அவர் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். இதனால் அவருக்கான மவுசு என்றுமே குறையாது. ஐபிஎல் தொடருக்கு வரும் போது கேப்டனாக மேலும் அவருடைய நெருக்கடி அதிகரிக்கும். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக ரோகித் சர்மாவை நாம் பார்க்க முடியும். அவருடைய முகத்தில் சிரிப்பு வரவேண்டும் என்பது எனது ஆசை.

    என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

    இதற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இதில் பல தவறுகள் இருக்கிறது என பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • புனே அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன், 71 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ் 7 வெற்றி, 11 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 3 தோல்வி, 3 டையுடன் 72 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    புனேரி பல்தான் 2-வது அணியாக 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 30-30 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியுடன் டை செய்ததால் வாய்ப்பை பெற்றது.

    புனே அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன், 71 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைடன்ஸ் 2 வெற்றி, 16 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 108-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் 7 வெற்றி, 11 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. உ.பி. அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 8-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. உ.பி. யோதா 4 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 28 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.

    • டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் ஏலத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ஏலப்பட்டியலில் 690 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 62 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

    டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது. 8 வீரர்களை விடுவித்துள்ளது.

    நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் கைவசம் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    ×