என் மலர்
விளையாட்டு
- 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 24.1 ஓவரில் 86 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 87 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா 6.5 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.
- பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.
கான்பெரா:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இன்று 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் ஆட்டம் அந்த அணியின் 1000-வது ஒருநாள் போட்டியாகும். ஆயிரம் போட்டியில் விளையாடிய 2-வது நாடு ஆஸ்திரேலியாவாகும். இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.
கான்பெராவில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 24.1 ஓவரில் 86 ரன்னில் சுருண்டது. 87 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
- இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
- 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.
இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தான் வீரர் இம்ராஹிம் ஜட்ரன் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார்.
- பிரபாத் ஜெயசூர்யா மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பில் நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அசிதா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மேத்யூஸ் (141), தினேஷ் சண்டிமல் (107) ஆகியோரின் சதங்களால் 439 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இம்ராஹிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 114 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் 241 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.

சதம் அடித்த மேத்யூஸ், சண்டிமல்
அதன்பின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 55 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 56 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரபாத் ஜெயசூர்யா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
முதல் நாள் (பிப்ரவரி 2-ந்தேதி): ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 80/0
2-வது நாள் (பிப்ரவரி 3-ந்தேதி): இலங்கை 410/6
3-வது நாள் (பிப்ரவரி 4-ந்தேதி): இலங்கை முதல் இன்னிங்சில் 439 ஆல்அவுட். ஆப்கானிஸ்தான் 199/1
4-வது நாள் (பிப்ரவரி 5-ந்தேதி): ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 50/0 (வெற்றி)
- கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர்.
- ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுய்யில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
ரச்சின் ரவீந்திரா (240), கேன் வில்லியம்சன் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணியின் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 80 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கைல் ஜாமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஹென்ரி
349 ரன்கள் முன்னிலை பெற்றும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது.
ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஜோடி இந்திய அணி வெற்றிக்கு எந்த நிலையிலும் பாதகமாக இருக்கும் என்ற இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க முயன்ற போது தனது விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார். ரன்களுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டிய ஸ்டோக்ஸ் சற்றே வேகம் குறைவாக ஓடியது, அவர் பெவிலியன் திரும்ப காரணமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து தனது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கையை இன்று ஷ்ரேயாஸ் அய்யர் அப்படியே செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எடுக்க முயன்ற போது வேகமாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வேகமாக ஸ்டம்ப்களை நோக்கி வீசினார்.
இவர் வீசிய பந்து ஸ்டம்ப்களை பதம் பார்க்க, பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தான் ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் போன்றே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார்.
- 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார்.
மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார். 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 12 இன்னிங்சுகளுக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்துள்ளார்.
இந்த நிலையில் சுப்மன் கில்லை தனித்துவத்தின் சகாப்தம் என டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
சுப்மன்கில்லின் இன்னிங்ஸ் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. சரியான நேரத்தில் இந்த சதத்தை அடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியா இந்தியா 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 332 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தது.
இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 23 ரன்னில் ரெஹன் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் மற்றும் ரூட் அதிரடியாக விளையாடினர். போப் 23(21) ரன்னிலும் ரூட் 16 (10) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பேர்ஸ்டோவ் 26, பென் ஸ்டோக்ஸ் 11, சாக் கிராலி 76 என ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
- கேன் வில்லியம்சன் 118 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால், ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டிதான். 4-வது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 240 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ரன்களும், டேரில் மிட்செல் 34 ரன்களும், மேட் ஹென்ரி 9 பந்தில் 27 ரன்களும் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நீல் பிராண்ட் 6 விக்கெட் சாய்த்தார்.
- இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை.
- தங்களுடைய அதிரடி ஆட்ட அணுகுமுறை மூலம் இலக்கை தொட முயற்சிப்போம்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 332 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. 180 ஓவர்கள் வீசப்படலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக களத்தில் நின்றாலே வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், 60 முதல் 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:-
சனிக்கிழமை இரவு எங்களுடைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் 600 டார்கெட் என்றாலும் கூட அதை நாம் துரத்த வேண்டும் என்றார். இது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெளிவான ஒன்றை உணர்த்தியுள்ளது. அது என்னவென்றால், நாளை (இன்று) நாங்கள் டார்கெட்டை தொட முயற்சிப்போம் என்பதுதான்.
இன்னும் 180 ஓவர்கள் மீதம் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் 60 அல்லது 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம். நாளைய எங்களது ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. அது வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி. எங்களுடைய வழியில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்" என்றார்.
- அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியவை உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகின்றன.
- மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி முதல் போட்டி நடைபெறும் என பிபா அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். அதன்படி 2026-ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியை நடத்த நியூயார்க், டெக்சாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூயார்க் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கி, ஜூலை 19-ந்தேதி நியூயார்க்கில் முடிவடைகிறது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
- 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் 3-வது பேட்ஸ்மேன் சதம் அடித்தது இல்லை.
- சுப்மன் கில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது சதம் அடித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் போட்டியின்போது இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசினார்.
டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை ரஞ்சி போட்டியில் விளையாட சொல்ல வேண்டும் என தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு சுப்மன் கில் முற்றுப் புள்ளி வைத்தார்.
மேலும், இந்திய டெஸ்ட் அணியில் 3-வது நபராக களம் இறங்கும் பேட்ஸ்மேன் இந்திய மண்ணில் சதம் அடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. புஜாரா கடந்த 2017-ம் ஆண்டு சதம் அடித்திருந்தார். அதன்பின் 3-வது வீரராக களம் இறங்கிய வீரர்கள் இந்திய மண்ணில் சதம் அடித்தது கிடையாது. தற்போது சுப்மன் கில் சதம் அடித்து ஏழு ஆண்டு காத்திருப்பை பூர்த்தி செய்துள்ளார்.
விசாகப்பட்டினம் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 255 ரன்னில் சுருண்டது.
இந்தியா 2-வது இன்னிங்சில் 253 ரன்னில் ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






