என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்போட் 69 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன் மூலம், ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் சீன் அப்போட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    • குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்'போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 ஆட்டத்தில் 2 வெற்றி, 16 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 7 வெற்றி, 10 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி 18-வது போட்டியில் குஜராத் ஜெயின்ட்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணியிடம் ஏற்கனவே சென்னையில் நடந்த ஆட்டத்தில் 30-33 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றியை பெற்றது. கடந்த ஆட்டத்தில் ஜெய்பூரிடம் தோற்றது. அந்த அணி மீண்டும் எழுச்சி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர், அஜிங்கயா பவார், ஹிமான்சு, சாஹர், அபிஷேக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் 6 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 43 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. மும்பை அணியும் 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 40 புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இதற்கிடையே, மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.

    ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார். 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இதுவரை இந்திய அணி 350க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
    • வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    மவுண்ட் மாங்கனு:

    தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.


    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை

    இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.

    ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.
    • பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.

    பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங்குடன் மோதினார்.

    இதில் அஷ்மிதா சாலிஹா 13-21, 12-21 என்ற செட் கணக்கில் சுபநிடா கேட்தாங்கிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கொழும்பு,

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    • இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

    ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.

    மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
    • ரோகித் சகவீரர்களை மோசமாக திட்டிய ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது அதற்கு பழிதீர்க்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்டம் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக 171 ரன்கள் என்கிற முன்னிலையுடன் இந்திய அணி பலமான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இன்றைய 2-நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சகவீரர்களை மோசமாக திட்டிய ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.

    இன்றைய போட்டியின் 31-வது ஓவருக்கு பிறகு அடுத்த ஓவர் வீசுவதற்கு முன்னதாக வீரர்களை பீல்டிங் செட் செய்து கொண்டிருந்த ரோகித் சக வீரர்கள் சிலரை நோக்கி தோட்டத்தில் நடந்து செல்வது போன்று போகாதீர்கள்.. வேகமாக செல்லுங்கள்.. என்று கூறி தாயை பழிக்கும் ஒரு வார்த்தை ஹிந்தியில் உபயோகித்து திட்டினார்.

    அவர் இப்படி சத்தமாக திட்டிய ஆடியோ ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்த கோலி பின்னர் 2 டெஸ்ட்டில் இருந்து விலகினார்.
    • கோலி டெஸ்ட்டில் விளையாடததற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலில் இடம் பிடித்தார். பின்னர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேள்விக்கு விராட் கோலியின் நண்பரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். அதில், விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்தார்.

    இதனால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கூட சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

    • முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    பார்சிலோனா:

    பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்விஸ் (வயது 40). பார்சிலோனா அணியில் விளையாடி 3 சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரேசில் அணியில் விளையாடி 2 கோபா அமெரிக்கா கோப்பைகள் உள்பட 42 கோப்பைகளை அவர் வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின்போது, பிரேசிலுக்காக விளையாடிய வயது முதிர்ந்த வீரராக அறியப்பட்டவர்.

    இவருக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்தபோது, கழிவறையில் வைத்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

    கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசிலுக்காக விளையாடிய பின்னர் விடுமுறையை கழிக்க அவர் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது, இளம்பெண் மற்றும் அவருடைய நண்பருக்கு மதுபானம் வழங்கிய டேனி, பின்னர் வேறொரு இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.

    இதுபற்றிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.

    இந்த வழக்கின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    ஸ்பெயினில் குற்ற செயலை ஒப்பு கொண்டால் குறைந்த அளவிலான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அந்த இளம்பெண் முன்வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கடந்த நவம்பரில் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட டேனி, அதுமுதல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    ×