என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்.
    • அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த அவர் டோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சுயநலமின்றி 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பை முத்தமிட உதவினார்.

    மேலும் கொல்கத்தா அணிக்காக 2012, 2014 வருடங்களில் கோப்பையை வென்ற அவர் 3-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்கு பின் அதிரடியான கருத்துக்களை தைரியமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தனது இளம் வயதில் அண்டர்-14 அணியில் விளையாடுவதற்காக தேர்வாளரின் காலில் விழ சொன்னதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    நான் வளரும் போது 12, 13 வயதில் என்னுடைய முதல் அண்டர்-14 தொடர் வந்தது நினைவிருக்கிறது. அந்தத் தொடரில் தேர்வாளரின் காலை நான் தொடாததால் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

    அண்டர்-16, அண்டர்-19, ரஞ்சிக் கோப்பை அல்லது என்னுடைய சர்வதேச கேரியரின் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடையும் போது கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையற்ற குடும்பத்திலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். அத்துடன் நீங்கள் உங்களுடைய அப்பாவின் தொழிலுக்கு சென்று விடுங்கள் என்று சொன்னார்கள். அது தான் என் தலை மீது தொங்கிய மிகப்பெரிய கருத்து.

    ஆனால் நான் அவர்களை விட அதிகமாக விரும்புகிறேன் என்பதை மக்கள் உணரவில்லை. நான் அந்த உணர்வை வெல்ல விரும்பினேன். அதை என்னால் செய்ய முடிந்த போது வேறு எந்த பார்வையும் என்னை தொந்தரவு செய்யவில்லை. என் வாழ்க்கையில் வெல்ல மிகவும் கடினமான கருத்து என்னவென்றால் அதை நான் கடினமாக விரும்பவில்லை. நான் அவர்களை விட கடினமாக இருக்க விரும்பினேன்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    • ஐ.பி.எல். 2024 தொடரின் குவாலிஃபையர் சுற்று போட்டி நடைபெற்றது.
    • ஐதராபாத் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து குவாலிஃபையர் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரசைர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஐதராபாத் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.


    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், ராகுல் திரிபாதி ரன் குவிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 13 ஓவரில் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட சமத் அதனை ஆஃப் சைடில் விளாசினார். சமத் விளாசிய பந்தை ஆண்ட்ரே ரசல் சிறப்பாக பிடித்துக் கொண்டார்.

    இதனிடையே ரன் ஓடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் சமத் ஒருபுறமும், திரிபாதி ஒருபுறமும் நின்றனர். பிறகு ராகுல் ஓட துவங்கியதாக நினைத்த சமத் மறுபுறம் கிரீசை கடந்துவிட்டார். இதைத் தொடர்ந்து ரன் ஓட துவங்கிய ராகுல் திரிபாதி நடுவில் தடுமாறி நிற்க, ரசல் துரிதமாக செயல்பட்டு பந்தை விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, ராகுல் திரிபாதி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    எதிர்பாராத ரன் அவுட் காரணமாக மனமுடைந்த ராகுல் முகம் முழுக்க கவலையுடன் களத்தை விட்டு வெளியேறினார். டிரெசிங் ரூம் செல்லும் வழியில், உணர்ச்சிகள் பொங்கிய நிலையில் ராகுல் திரிபாதி படிக்கட்டில் அமர்ந்து முகத்தை மறைத்தப்படி சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தார்.

    தொடரின் மிகமுக்கிய போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனதில் முகம் முழுக்க கவலையுடன் காணப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • தாய்லாந்து ஓபன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
    • ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்தனர்.

    புதுடெல்லி:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், தாய்லாந்து ஓபன் தொடரில் வெற்றிபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜோடிக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் தரப்பில் ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.

    அதனை தொடர்ந்து அபிஷேக் சர்மா 3, நிதிஷ் ரெட்டி 9, சபாஷ் அகமது 0, என வெளியேறினர். இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக விளையாடிய கிளாசன் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதியுடன் சமாத் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அரை சதம் கடந்தார்.

    மிகவும் நம்பிக்கையுடன் இந்த ஜோடி விளையாடி வந்தது. தேவையில்லாமல் 1 ரன்னுக்கு ஆசைப்பட்ட இந்த ஜோடி ரன் அவுட் ஆனது. இதில் ராகுல் திரிபாதி 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இம்பெக்ட் பிளேயாராக வந்த சன்வீர் சிங் கோல்டன் டக் அவுட்டும் புவனேஸ்வர் குமார் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.

    இதனையடுத்து கேப்டன் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகள் விளையாடி உள்ளார்.
    • 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ்.

    யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ் (34). ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ராஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.

    இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து க்ரூஸ் கூறியதாவது:-

    ஜூலை 17, 2024-ல் ரியல் மாட்ரிட்டில் நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.

    என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    என அவர் கூறியுள்ளார். 

    • குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.

    நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்று ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.

    இந்த நரேந்திர மோடி மைதானத்தில் அன்று 137 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் இன்று டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.

    • முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
    • இந்தியா மொத்தம் பத்து பதக்கங்களை வென்றுள்ளது.

    மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. மே 17 ஆம் தேதி துவங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்கள் வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

    • ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது.

    இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    எதிர்வரும் டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், பிராவோ விரைவில் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். மேலும் 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நல்ல ஆடுகளமாக தெரிகிறது. அதிக ரன்கள் அடிக்கும் போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது- கம்மின்ஸ்
    • நாங்கள் முதலில் பந்து வீசத்தான் விரும்பினோம். இது சிறந்த போட்டியாக அமையும் என நம்புகிறோம்- ஷ்ரேயாஸ் அய்யர்

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவின் பிளேஆஃப் சுற்றுகள் இன்று தொடங்கியது. இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் வென்றது குறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் "நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். நல்ல ஆடுகளமாக தெரிகிறது. அதிக ரன்கள் அடிக்கும் போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு பேட்டிங் குரூப் அமேசிங்காக உள்ளது. இன்று அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவன் உடன் களம் இறங்குகிறோம்" என்றார்.

    டாஸ் தோற்ற ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் "நாங்கள் முதலில் பந்து வீசத்தான் விரும்பினோம். இது சிறந்த போட்டியாக அமையும் என நம்புகிறோம்" என்றார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி. நடராஜன்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:-

    குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ஷ்ரேயாஸ் அய்யர், ரிங்கி சிங், அந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:-

    கொல்கத்தா:- அனுகுல் ராய், மணிஷ் பாண்டே, நிதிஷ் ராணா, கேஎஸ் பாரத், ரூதர்போர்டு

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:- சன்வீர் சிங், உம்ரான் மாலிக், கிளென் பிலிப்ஸ், வாசிங்டன் சுந்தர், உனத்கட்

    • 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
    • 2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தற்காக பெங்களூரு ரசிகர்களிடம் முன்னாள் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வீரர் ஷேன் வாட்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.

    2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு எதிர் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இந்த தோல்வி குறித்து பேசிய வாட்சன், "2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு.
    • பதவிக்காலம் சுமார் இரண்டரை ஆண்டுகள் என்பதால் பிளமிங் யோசனை செய்வதாக தகவல்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஜூன் மாதத்துடன் அவரது பயிற்சி காலம் முடிவுடைகிறது. இதனால் விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், கவுதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணம் செய்ய மாட்டேன் என இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் 2027 வரை பதவிக்காலம் என்பது நீண்டு காலம் என அவர் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டும் இதுபோன்றுதான் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல் பிளமிங்கும் சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவருடன் எம்.எஸ். டோனி நெருக்கமாக உள்ளார். இதனால் டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் வற்புறுத்தப்பட்டார். அதேபோல் ஸ்டீபன் பிளமிங் வற்புறத்தப்படலாம். இதற்கு டோனியை விட சிறந்த நபர் யாராக இருக்க முடியும்? என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    • டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை
    • எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், துபாய் ஐ யூடியூப் சேனலில் டோனி பேட்டி அளித்துள்ளார். அதில், "டுவிட்டரை விட இன்ஸ்டாகிராமை பயன்படுத்தவே நான் அதிகம் விரும்புவேன். டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை டுவிட்டரில் எதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சை ஆக்கிவிடுவார்கள். அதில் ஏன் நான் இருக்க வேண்டும்?

    எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஏதாவது வீடியோவை பதிவிட்டு, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×