என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காயத்தால் வெளியேறினார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.

    முதல் செட்டில் சபலென்கா 1-5 என இருந்தபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சபலென்கா போட்டியில் இருந்து விலகினார்.

    இதனால் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.

    • இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
    • அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

    இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

    4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    • எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
    • ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.

    துருக்கி:

    துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

    • ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஜெர்மனி வீரர் ஸ்டர்ப் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-2, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் சின்னர், சீன வீரர் ஜிஜெங்கை சந்திக்கிறார்.

    • விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.
    • இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

    நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.

    அந்த வீடியோவில், பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் அந்த பைக் காட்சியின் புகைப்படத்தில் விஜய்க்கு பதிலாக எம்.எஸ்.டோனி மற்றும் ருதுராஜ் முகத்தை எடிட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவை விஜய் ரசிகர்கள் மற்றும் டோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன்.
    • இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல.

    தனது கிரிக்கெட் அனுபவங்கள் தொடர்பான 'I Have the Streets - குட்டி ஸ்டோரி' என்ற புத்தகத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.

    இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.

    அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ர்த்து கொண்டார்.

    எம்.எஸ்.டோனி குறித்து பேசிய அஷ்வின், "ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன். சேலஞ்சர் டிராபி போட்டியில் போது நூலிழையில் டோனியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியாமல் போனது. இன்றும் அந்த பால் எனக்கு நினைவில் உள்ளது. அனால் அப்போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் நான் டைவ் அடித்து டோனியின் கேட்சை பிடித்து கொண்டாடினேன்.

    டோனி ஒருமுறை உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால் நீங்களே சோர்வடையும் வரை உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்" என்று தெரிவித்தார்.

    கவுதம் கம்பீர் குறித்து பேசிய அஷ்வின், "அவர் போராட்ட குணம் கொண்டவர். சில பேர் சிரிக்க மாட்டாங்க அவ்வளவுதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    "இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல" என்று அஷ்வின் தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29 ரன்களும் நிதிஷ் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், ராஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 0-0 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

    • குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.
    • 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.

    இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.

    முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.

    இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×