என் மலர்
விளையாட்டு
- 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
- என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.
இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.
நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.

நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக் கில் சம நிலையில் முடிந்தது.
- அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.
வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 164 ரன்னிலும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 146 ரன்னிலும் சுருண்டன.18 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வங்காள தேசம் 268 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீ சுக்கு 287 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜாகர் அலி 91 ரன் எடுத்தார்.
287 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது.
வங்காளதேச வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி 185 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு வங்காளதேசம் பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக் கில் சம நிலையில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வங்காளதேசம் 3-வது வெற்றியை டெஸ்டில் பதிவு செய்தது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
- சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது.
- நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.
இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே ஹைபிரிட் மாடலை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு உரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது.
இதை ஏற்று உறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.
இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் 3 ஐ.சி.சி. போட்டிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரியில் 20 ஓவர் உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து நடக்கிறது. 2029-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031-ல் உலக கோப்பை போட்டிகளை நடத்துகிறது.
- ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து சச்சின் டெண்டுல்கர் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தனது நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது வினோத் காம்ப்ளி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெண்டுல்கரும், காம்ப்ளியும் பள்ளி பருவத்தில் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
- முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் இன்று தொடங்கியது.
இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் யு மும்பா - புனேரி பால்டன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டத்தில் 43-29 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 34 புள்ளிகள் எடுத்து டிரா செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று முதல் தொடங்கியது.
இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இதில் இரு அணி சிறப்பாக ஆடினர். இதனால் குஜராத், பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் 34-34 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலையில் முடிந்தது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தானின் சுபியான் முக்கிம் 3 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
புலவாயோ:
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 2-1 என தொடரைக் கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 12.4 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டும் இரட்டை இலக்கத்தை தாண்டினர்.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுபியான் முக்கிம் 2.4 ஓவரில் வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரையும் கைப்பற்றியது.
- புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகியவை உள்ளன.
- நியூசிலாந்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.
துபாய்:
ஐசிசி நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
இதற்கிடையே, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
- இதற்காக இரு அணி வீரர்களும் அடிலெய்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியா -இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இரு அணி வீரர்களும் அடிலெய்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்மித்-க்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அந்த அணியின் பிசியோ தெரபிஸ்ட் கண்காணித்தார். இதனையடுத்து அவர் வலைபயிற்சியில் இருந்து வெளியேறினார்.
இருவருக்கும் காயம் எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து சரியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ், சச்சின் தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர்.
- இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்திருந்தார். இந்த நிலையில் வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடித்தால் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்வார்.
1930-1948-ம் ஆண்டு காலகட்டங்களில் விளையாடிய பிராட்மேன் இங்கிலாந்தில் 11 சதத்தை அடித்தார். கோலியும் ஆஸ்திரேலியாவில் 11-வது சதத்தை அடித்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பிராட்மேனின் உலக சாதனையை கோலி சமன் செய்வார்.
இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியாவில்), சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில்) தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் 76 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது.
- வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீட்டுகட்டு போல் சரிந்தது. அந்த அணி 65 ஓவர்களில் 146 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்டத்தில் 76 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது. வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 18 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 41.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி இதுவரை 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது.






