search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fast bowler"

    • சுமார் 6 வருட காலம் ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் பங்கேற்கவில்லை
    • உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட இது ஒரு வாய்ப்பு என்றார் ஸ்டார்க்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிக தொகையாக ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2018 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார் ஸ்டார்க்.

    இடையில் பல வருடங்கள் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், பிற போட்டி தொடர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது என இருந்த ஸ்டார்க், திடீரென மனதை மாற்றி கொண்டு தற்போதைய ஏலத்தில் பங்கேற்க சம்மதித்தார்.

    சுமார் 6 வருட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு என் அதிக பங்களிப்பை உறுதி செய்ய நினைத்தேன். இவ்வருட கடைசியும் அடுத்த வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு சர்வதேச அரங்கில் ஒரு அமைதியான காலகட்டம். என் திறனை மேம்படுத்தி கொள்ள தலைசிறந்த உலக தரம் பெற்ற முன்னணி வீரர்களுடன் விளையாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க சம்மதித்தேன்" என தெரிவித்தார்.

    ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியின் சார்பில் பங்கேற்ற அந்த அணியின் ஆலோசகர், முன்னாள் இந்திய கிரிக்கெட் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட ஸ்டார்க்கின் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக, "புது பந்தை வீசுவதிலும், கடைசி ஓவர்களில் பந்து வீசுவதிலும், தாக்குதலை முன்னெடுத்து செல்வதிலும் ஸ்டார்க் மிக சிறந்த நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை" என தெரிவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் சமியை போல்ட் செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி ஆண்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

    சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson 
    ×