என் மலர்

  நீங்கள் தேடியது "Anderson"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் சமியை போல்ட் செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

  டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி ஆண்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

  சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானை 174 ரன்னில் சுருட்டியது இங்கிலாந்து. சதாப் கான் 56 ரன்கள் சேர்த்தார். #ENGvPAK
  இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.

  டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

  அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.  5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.

  இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.  சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நடால், காஸ்குயட், ஷபோவாலோவ், கே ஆண்டர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
  பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் சிமோன் பொலேல்லியை எதிர்கொண்டார். இதில் நடால் முதல் இரண்டு செட்டுகளையும் 6-4, 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் நடால் 7 (11) - 6 (9) என கைப்பற்றி வெற்றி பெற்றார்.


  ஷபோவாலோவ்

  6-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் தரம் நிலை பெறாத பயோலோ லாரென்சியை எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 6-1, 6-2, 6-4 என எளிதில் வெற்றி பெற்றார்.

  3-ம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-5, 7(7) - 6(4) என டக்வொர்த்தை வீழ்த்தினார். 19 வயதே ஆன கனடாவின் இளம் வீரரான டெனிஸ் ஷபோவாலோவிற்கு இதுதான் அறிமுக பிரெஞ்ச் ஓபன் ஆகும். முதல் சுற்றில் மில்மானை எதிர்கொண்டார். இதில் ஷபோவாலோவ் 7-5, 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.
  ×