என் மலர்
விளையாட்டு
- ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.
- இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது குறித்து 38 வயதான ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்.
இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன். அது முன்பிருந்தது போல் இருக்காது. ஆனால் நிச்சயம் இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர் அறிவது முக்கியம்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
- தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது. பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வங்கதேசம், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்றும் கொக்கரித்தது.
இந்தியாவில் ஆடுவது குறித்து ஜன.21-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று அணி அறிவிக்கப்படும் என ஐ.சி.சி., வங்கதேசத்தை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்துக்கு ஆதரவு கரம் நீட்டியது. ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான், வங்கதேசத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்குரிய ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்த தயாராக இருப்பதாக அதில் கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் போர்டு இயக்குனர்கள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தனர். இதில் வங்கதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால் அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதாவது பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளித்தது.
பின்னர் ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், 'பலகட்டமாக எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும், தனிப்பட்ட முறையிலும் விரிவாக ஆய்வு செய்த போது, இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த ஒரு இடத்திலும் வங்கதேச அணியினர், ஊடகத்தினர், அதன் அதிகாரிகள், ரசிகர்களுக்கு எந்தவித பாதுகாப்பு மிரட்டலும் இல்லை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி நம்பகமான எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத இத்தகைய சூழலில் போட்டி அட்டவணையை மாற்றம் செய்வது என்பது புனிதமான ஐ.சி.சி. போட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் இது ஐ.சி.சி.யின் நடுநிலை தன்மைக்கு பாதகமாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு வங்கதேசத்துக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று தொடர்ந்து முரண்டு பிடித்தால் அந்த அணிக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.
20 அணிகள் இடையிலான 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணிக்குரிய ஆட்டங்களை கொல்கத்தா (பிப்.7 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பிப்.9 இத்தாலிக்கு எதிராக, பிப்.14 இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் மும்பையில் (பிப்.17 நேபாளத்துக்கு எதிராக) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நாக்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் மற்றும் உள்ளூர் போட்டி சேர்த்து) இதுவரை 169 ஆட்டங்களில் ஆடி 5,002 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரஸலிடம் இருந்து (2,942 பந்தில்) தட்டிப் பறித்தார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செர்பியாவின் ஒல்கா டேனிலோவிச் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.
துபாய்:
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. டார்விஷ் ரசூல் 68 ரன்னும், செதிகுல்லா அடல் 53 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 17 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் சூ வெய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடியா லக்ஷயா சென் முதல் செட்டை 21-13 என வென்றார். இதற்கு பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-14 என்ற செட் கணக்கில் வென்ற லக்ஷயா சென் இரண்டாவ்து சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.
- அபிஷேக் சர்மா 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
நாக்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ரிங்கு சிங் 20 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் தனி ஆளாகப் போராடி 40 பந்தில் 78 ரன்கள் குவித்தார். மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ்-சாப்மேன் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் இரண்டாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹாப்மன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (4), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-7 (11), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் குயின்டைன் ஹைல்சை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அபிஷேக் சர்மா 35 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 5 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விகெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது ஓவரை பிலிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்தியா 8.4 ஓவரிலேயே 100 ரன்னைத் தொட்டது

அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 35 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 12 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ஷிவம் துபே 9 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஹரிக் பாண்ட்யா உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார்.
ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 15.4 ஓவரில் 185 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். 17.2 ஓவரில் இந்தியா 200 ரன்களை தாண்டியது.

அக்சர் படேல் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களம் இறங்கினார். கடைசி ஓவரில் ரிங்கி சிங் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்துள்ளது. ரிங்கு சிங் 20 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.
- 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 5 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விகெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 8-வது ஓவரை பிலிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.
- ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை 5 மாநில தேர்தல் தேதிகள் வெளியானதும் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் தேதிகளை பொறுத்து போட்டி அட்டவணை முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
- தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 352 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ஐசிசி பேட்டர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர்.






