என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: 22 பந்தில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: 22 பந்தில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

    • ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.
    • 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.

    அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 5 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3-வது விகெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 8-வது ஓவரை பிலிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.

    Next Story
    ×