என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஹரோல்ட் மேயாட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (8-10) என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
    • பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அப்போது பாபர் அசாம் பேட்டிங் ஆட களமிறங்கினார். அவருக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீசினார். அவர் வீசிய பந்தில் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீம காலமாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருவது பாகிஸ்தான் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.

    டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஒரு நாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் அதிக நேரம் செலவிட முடியும். இது ஒரு நீண்ட வடிவம், ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு அல்ல. ஆனால் இது ஒரு சிறந்த முடிவு என நான் நினைக்கிறேன்.

    இங்கிலாந்தின் பார்வையில் இது ஒரு ஏமாற்றமான தொடர். நான்காவது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக மாற்றீடு சரியாக செய்யப்பட்டிருந்தால் இங்கிலாந்து அங்கு வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். வான்கடே போட்டியில் 2-2 என்ற கணக்கு வந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்தார்.

    • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை அறிவித்து விட்டனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை அறிவித்து விட்டனர். இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமானது.
    • என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன்.

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்தார்.

    இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. அதன் காரணமாக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விராட் கோலி டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்த அவர் மீண்டும் சொதப்பினார். ரெயில்வே அணியின் ஹிமான்ஷு சங்வான் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

    இந்நிலையில் 5-வது ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்கலாம் என்று தங்களுடைய அணியின் பஸ் டிரைவர் திட்டம் கொடுத்ததாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியிடம் பந்தை கையெழுத்திடுமாறு கொடுத்தபோது இதில்தான் என்னை அவுட்டாக்கினீர்களா? அது மிகவும் நல்ல பந்து. நீங்கள் நல்ல பவுலர். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான விக்கெட். ஏனெனில் விராட் கோலி நம்முடைய மொத்த நாட்டின் உத்வேகமாக இருக்கிறார்.

    என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன். எனவே அது எங்கள் அணிக்கு ஸ்பெஷலான விஷயம். ரெயில்வேஸ் அணியின் முன்னணி பவுலரான என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியும் என்று எங்கள் அணி வீரர்கள் சொன்னார்கள்.

    பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அதனுடைய டிரைவர் கூட நீங்கள் 4 - 5 ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலி அவுட்டாகி விடுவார் என்று சொன்னார். அதனால் எனக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. ஆனால் நான் ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் விக்கெட்டை எடுப்பதைவிட, எனது சொந்த முயற்சியின் மூலம் விக்கெட் எடுக்க வேண்டும் என நினைத்தேன். விராட்டின் விக்கெட்டை வீழ்த்தவும் செய்தேன்.

    என்று ஹிமான்ஷூ கூறினார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இந்தியா - இங்கிலாந்து தொடரின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியைத்தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. எனவே யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும்.

    என்று அஸ்வின் கூறினார்.

    • டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
    • இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே.

    துபாய்:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் (பிப்.23) அடங்கும்.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.

    இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்கத் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதே போல் துபாயில் நடக்கும் முதலாவது அரைஇறுதிக்கான டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அரைஇறுதி முடிந்த பிறகே இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.

    • ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
    • மிக குறைந்த இருதரப்பு தொடர்களில் விளையாடினோம்.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்ன தனது 100வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி திமுத் கருணரத்னவின் கடைசி போட்டியாகும்.

    இலங்கை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 40க்கும் குறைவான சராசரியில் 7,172 ரன்கள் எடுத்துள்ளார். 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் திமுத் கருணரத்ன ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 1,316 ரன்கள் எடுத்துள்ளார்.

    "ஒரு டெஸ்ட் வீரர் ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும், தனது ஃபார்மைத் தக்கவைக்கவும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது கடினம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்ட கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், நாங்கள் மிக குறைந்த இருதரப்பு தொடர்களில் தான் விளையாடினோம்."

    "எனது தற்போதைய ஃபார்ம்-ஐ கருத்தில் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (2023-25) முடிவு அன்று எனது 100 டெஸ்ட் போட்டியை விளையாடி, ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன்," என்று கருணரத்ன தெரிவித்துள்ளார். 

    • பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
    • விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்களை விளாசினார். இந்த சதம் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    இவரது சதம் காரணமாக இந்திய அணி கடைசி டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா நிறைய சாதனைகளை முறியடித்தார். இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்களில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா தற்போது விராட் கோலியை முந்தியுள்ளார். சமீபத்தில் நிறைவுபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா ஒட்டு மொத்தமாக 279 ரன்களை விளாசியுள்ளார்.

    முன்னதாக 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்திருந்தார். ஒட்டுமொத்த சாதனையைப் பொறுத்தவரை, ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வெறும் 4 இன்னிங்ஸ்களில் இவர் 280 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்தியாவுக்காக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள்:

    280 ரன்கள் - திலக் வர்மா (4 இன்னிங்ஸ்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2024

    279 ரன்கள் - அபிஷேக் சர்மா (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2025

    231 ரன்கள் - விராட் கோலி (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2021

    224 ரன்கள் - கே.எல். ராகுல் (5 இன்னிங்ஸ்) நியூசிலாந்துக்கு எதிராக, 2020

    • இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
    • ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.

    அரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 தொடரில் பங்கேற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் மும்பை அணி ரஞ்சி கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் ஆளுக்கு ஒரு போட்டியில் விளையாடினர்.

    மேகாலயாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் எலைட் குரூப் ஏ-வில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு அணி ஜம்மு காஷ்மீர் ஆகும்.

    அக்டோபரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றார். சிவம் துபே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய நட்சத்திர அணியில் விளையாடினார். மும்பை அணி கடந்த மாதம் சொந்த மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.

    மும்பை அணி:

    அஜிங்க்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, டனுஷ் கோட்யன், மோகித் அவாஸ்தி, சில்வஸ்டர் டி சொசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அங்கொலெகர் மற்றும் ஹர்ஷ் டன்னா.

    • இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • டாடா ஸ்டீல்ஸ் போட்டிக்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா வென்றார். நெதர்லாந்து சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். நெதர்லாந்தில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் அவர் வந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சந்தனமாலை, பொன்னாடை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி, பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பிரக்ஞானந்தாவை வரவேற்றனர்.

    பின்னர் விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து நான் சரியாக ஆடவில்லை. இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டாடா ஸ்டீல் போட்டிக்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.

    இந்த ஆண்டு அதிகமான போட்டிகள் இருக்கிறது. கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகளும் உள்ளன. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனது ஆட்டத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது மிகவும் திருப்தி அளிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    கடைசி சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே சென்னையை சேர்ந்தவர்களுக்குதான் (பிரக்ஞானந்தா, குகேஷ்) சாம்பியன் பட்டம் என்ற நிலை ஏற்பட்டது. இது மிகவும் பெருமையானது.

    கடைசி சுற்று ஆட்டம் இருவருக்கும் சவாலாக இருந்தது. நானும், குகேஷ்-ம் மோதிய டை பிரேக்கர் பரபரப்பாக இருந்தது. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அதிக வேகமாக காய் நகர்த்துவதற்கான பினிட்ஸ் ரவுண்டில் குகேஷை வீழ்த்தி பட்டம் பெற்றது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

    இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.





    • நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.
    • ஸ்போர்டிங் சிபி அணிக்காக 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து தொடரில் அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆட்டத்தில் 39 வயதான ரொனால்டோ தொடர்ந்து 2 கோல்களை அடித்து அசத்தினார். அல் வாசில் அணிக்கு எதிராk நடந்த இப்போட்டியில் அல் நாசர் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இது கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற 700-வது கிளப் போட்டியாக அமைந்தது. இன்னும் இரு தினங்களில் ரொனால்டோ தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.

     


    ஐந்து முறை பாலன் டி'ஓர் விருது வென்றுள்ள ரொனால்டோ கடந்த ஆகஸ்ட் 2002 இல் தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கி வெற்றிகளை குவித்து வருகிறார். 2003 இல் ஓல்ட் டிராஃபோர்டு அணிக்கு வரும் முன்பு ரொனால்டோ ஸ்போர்டிங் சிபி அணிக்காக விளையாடி 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார். இவற்றில் ரியல் மாட்ரிட்டில் தான் ரொனால்டோ தனது பெரும்பாலான வெற்றிகளை பெற்றார். அவர் லாஸ் பிளாங்கோஸ் அணிக்காக 315 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

    ரொனால்டோ ஆகஸ்ட் 2021-இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்புவதற்கு முன்பு மூன்று சீசன்களில் ஜுவென்டஸ் அணியுடன் 92 ஆட்டங்களில் வென்றார். இன்டர் மியாமி ஃபார்வர்ட் லியோனல் மெஸ்ஸி 613 கிளப் கேரியர் கிளப் ஆட்டங்களில் வென்றுள்ளார். இதில் பார்சிலோனாவுடன் 542 கோல்களும் அடங்கும்.

    ஜனவரி 30 ஆம் தேதி வரை ரொனால்டோ 921 கோல்களை அடித்துள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் தனது கேரியரில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனது 30 வயது வரை 463 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ 30 வயதுக்கு பிறகு 460 கோல்களை அடித்துள்ளார்.

    உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். 

    ×