என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.

    ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.

    இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.

    முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
    • நாம் சூப்பர்ஸ்டார்கள் அல்ல, விளையாட்டு வீரர்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது முதல் ரவிச்சந்திரன் அஷ்வின் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், யூடியூப் தளத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இதன் பிறகு, அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் அஷ்வின் சமீபத்தில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிராக பேசியிருந்தார். அப்போது, வீரர்கள் மக்களுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள நிதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் இந்தி மொழி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது முக்கியம். இந்திய கிரிக்கெட் அணிக்குள் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது. எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நாம் இயல்பாக்க வேண்டும். நாம் கிரிக்கெட் வீரர்கள்."

    "நாம் நடிகர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், மேலும் பொது மக்கள் எதிரொலிக்க வேண்டிய, தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், செர்பிய வீரர் மெத்ஜெடோவிச் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதுகிறார்.

    • பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.
    • கராச்சியில் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் அரங்கேறுகிறது.

    கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ம் தேதி) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 529 ரன்கள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் 173 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், விராட் கோலி இந்தத் தொடரில் இன்னும் 37 ரன் அடித்தால் 14,000 ரன்களை கடந்த 3-வது வீரராக சாதனை படைப்பார். இந்தத் தொடரில் இன்னும் 263 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி பந்தில் 2 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை 164 ரன்களில் ஆல் அவுட்டானது. நாட் சீவர் பிரண்ட் 80 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டெல்லி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். நிக்கி பிரசாத் 35 ரன்னும், சாரா பிரைஸ் 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.

    பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் பல்வேறு தடைகளை கடந்து இந்த தொடரை நடத்த இருக்கிறது.

    முதலில் இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்து தொடர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், நாங்கள்தான் தொடரை நடத்துவோம் என பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்பிறகு போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை சீரமைக்கும் பணி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடைய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. அந்த தடையையும் கடந்து வந்துள்ளது.

    லாகூர் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா உடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தியது.

    இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி பாகிஸ்தான் தொடக்க போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை பல வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் பார்வையிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதால், பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    அத்துடன் இந்திய அணிக்கெதிராக கோபமாக உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு கடுமையாக தகவலை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடியும் வரை இந்திய அணி வீரர்கள் உடனான நட்பை புறந்தள்ளி வைக்கவும். மேலும், விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை கட்டி பிடிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
    • மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 லட்சம் ரூபாய்க்கு இந்திய அணி வீரரான விஜய் சங்கரை ஏலம் எடுத்தது.

    ஸ்வப்னில் கே. சிங்கை ரூ. 10.8 லட்சத்திற்கு எடுத்தது. தினேஷ் ராஜை ரூ. 50 ஆயிரத்திற்கும், மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கும், கிருபாகரனை ரூ. 50 ஆயிரத்திற்கும், அக்ரம் கானை ரூ. 1.10 லட்சத்திற்கும், ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கும், ராஜலிங்கத்தை ரூ. 50 ஆயிரத்திற்கும், பிரேம் குமாரை ரூ. 60 ஆயிரத்திற்கும், ஆசிக் ஸ்ரீனிவாசை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் பெரியசாமியை ரூ. 9.8 லட்சத்திற்கும், மான் கே. பஃவ்னாவை ரூ. 5.7 லட்சத்திற்கும், ஆர்.கே. ஜெயந்த்தை ரூ. 1.15 லட்சத்திற்கும், விமல் குமாரை ரூ. 3.80 லட்சத்திற்கும், ராஜ்விந்தர் சிங்கை ரூ. 50 ஆயிரத்திற்கும், சந்திரசேகரை ரூ. 85 ஆயிரத்திற்கும், ஹன்னி சைனியை ரூ. 11.70 லட்சத்திற்கும், கார்த்திக் சரணை ரூ. 50 ஆயிரத்திற்கும், விஜு அருளை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.

    • தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது
    • இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்திய அணி துபாய் புறப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ரோகித் சர்மா தொடர்பான ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று PTI அறிக்கை வெளியாகி உள்ளது.

    மேலும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா, இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ரோகித் சர்மா இல்லாதபோது பும்ரா இதற்கு முன்பு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.
    • அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜீவன் சஜனா நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கேரள பழங்குடியினத்தை சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பொருளாதர சவால்களை கடந்து சாதித்த வீராங்கனையாக சஜனா விளங்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார். 

    தற்போது இஎஸ்பின் ஊடகத்துக்கு பேட்டியளித்த சஜனா, சிவகார்த்திகேயன் சார் எனக்கு போன் செய்து உதவி தேவையா என்று கேட்டார். நான் அவரிடம், 'அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.

    ஒரு வாரத்திற்குள் எனக்குப் புதிய ஸ்பைக்குகள் கிடைத்தன. அந்த நேரத்தில் நான் சேலஞ்சர் டிராபிக்கும் செல்ல வேண்டியிருந்தது. அங்குள்ள அனைவரும் என் குடும்ப சூழல் பற்றி கேட்பார்கள், அப்போது நான் பதற்றமடைவேன். ஆனால் எல்லோரும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார். 

    ×