என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிவகார்த்திகேயன் அண்ணா தான் உதவினார்.. கிரிக்கெட் வீராங்கனை சஜனா நெகிழ்ச்சி!
- கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.
- அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜீவன் சஜனா நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கேரள பழங்குடியினத்தை சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பொருளாதர சவால்களை கடந்து சாதித்த வீராங்கனையாக சஜனா விளங்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.
தற்போது இஎஸ்பின் ஊடகத்துக்கு பேட்டியளித்த சஜனா, சிவகார்த்திகேயன் சார் எனக்கு போன் செய்து உதவி தேவையா என்று கேட்டார். நான் அவரிடம், 'அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.
ஒரு வாரத்திற்குள் எனக்குப் புதிய ஸ்பைக்குகள் கிடைத்தன. அந்த நேரத்தில் நான் சேலஞ்சர் டிராபிக்கும் செல்ல வேண்டியிருந்தது. அங்குள்ள அனைவரும் என் குடும்ப சூழல் பற்றி கேட்பார்கள், அப்போது நான் பதற்றமடைவேன். ஆனால் எல்லோரும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.






