என் மலர்
விளையாட்டு
- வாள்வீச்சு போட்டியில் தமிழகத்துக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.
- பெண்கள் தனிநபர் பாயில் பிரிவில் ஜாய்ஷ் அஷி தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் இந்த போட்டி முடிவடைந்தன. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் ஆக மொத்தம் 92 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6- வது இடத்தை பிடித்தது
தேசிய விளையாட்டில் வாள்வீச்சு போட்டியில் தமிழகத்துக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.
பெண்கள் தனிநபர் சேபர் பிரிவில் பவானி தேவி (சென்னை), ஆண்கள் தனிநபர் பாயில் பிரிவில் பிபிஷ், சேபர் பிரிவில் கிஷோநிதி (இருவரும் கன்னியாகுமரி) ஆகியோர் தங்கம் வென்றனர். ஜாய்ஷ் அஷி தா, சுவர்ண பிரபா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி ( சேலம்) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணிகள் பாயில் பிரிவில் தங்கம் வென்றது.
பெண்கள் தனிநபர் பாயில் பிரிவில் ஜாய்ஷ் அஷி தா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜெபர்லின், பெனி குயிபா (கன்னியாகுமரி ) சசிபிரபா (சென்னை) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணிக்கு சேபர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது.
வாள்வீச்சு போட்டியில் ஒட்டு மொத்த பிரிவில் தமிழக பெண்கள் அணி 2-வது இடத்தையும், ஆண்கள் அணி 3-வது இடத்தையும் பிடித்தன. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் கே.கருணாகரன் ஆகியோர் பாராட்டினார்கள்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அனிசிமோவா அதிரடியாக ஆடி 6-3, 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோ உடன் மோத உள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து 46 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து வென்றது.
- ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.
அகமதாபாத்:
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் தொடங்கியது.
வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரை சதமடித்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி தரப்பில் ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. எல்லீஸ் பெரி 34 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிச்சா கோஷ், கனிகா அவுஜா ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிச்சா கோஷ் 27 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்தார். கனிகா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
- முதல் செட்டை 3-6 என இழந்தார்.
- 2-வது செட்டை 1-6 விரைவில் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், தரநிலை பெறாத லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓஸ்டாபென்கோ அபாரமாக விளையாடினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்வியாடெக்கால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஓஸ்டாபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
4 முறை ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார் ஓஸ்டாபென்கோ. ஆனால் ஸ்வியாடெக் ஒரேயொரு முறைதான் ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார். 10-ல் ஐந்து முறை பிரேக் பாயிண்ட்ஸ் பெற்றார் ஓஸ்டாபென்கோ. அதேவேளையில் ஸ்வியாடெக் 3-ல் ஒருமுறைதான் பிரோக் பாயிண்ட் பெற்றார்.
- குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
- ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூன் -லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா வால்வார்ட் 6 ரன்னிலும் அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டியாண்ட்ரா டாட்டின் 25, சிம்ரன் ஷேக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தது. ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
- வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு துறையும் பலவீனமாக உள்ளதுடன், அணியின் வெற்றி வாய்ப்பையும் அது பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல. அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது. ஆனால் பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
அதனால் வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என்று தெரிவித்துள்ளார்.
- விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
- 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.
மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
- இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.
இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுத் சஹீல் 8 ரன்னிலும் பாபர் அசாம் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ரிஸ்வான் - சல்மான் ஆகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தையப் தாஹிர் 38, ஃபஹீம் அஷ்ரஃப் 22, நசீம் ஷா 19 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






