என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை.
    • பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போட்டிகள்  ஒத்திவைக்கப்படுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு பிசிசிஐ தலையில் விழுந்துள்ளது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிகின்றன.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது.

     இதற்கிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.

    எனவே ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அவரை கேப்டனாக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்றிரவு லக்னோவில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதும் அடங்கும். இனி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) அதிரடியில் அசத்துகின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட் (11 ஆட்டத்தில் 128 ரன்), டேவிட் மில்லர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் சில ஆட்டங்களில் நன்றாக பந்து வீசியுள்ளனர். பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 7 அரைசதங்களுடன் 505 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர். காயத்தால் தேவ்தத் படிக்கல் விலகியிருப்பது சற்று பின்னடைவாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டுகிறார்கள்.

    மொத்தத்தில் பெங்களூரு அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட லக்னோ அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் அல்லது ஆகாஷ் சிங்.

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், ஹேசில்வுட் அல்லது சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளது.

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அவசர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னதாக ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் எக்ஸின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது துபாயில் நடைபெறும் என்று பிசிபி உறுதிப்படுத்தியுள்ளது.

    அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும், மேலும் அனைத்து அணிகளும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் துபாய்க்கு அனுப்பப்படும்.

    • சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
    • காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து சந்தீப் சர்மா விலகினார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    மேலும் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

    இதற்கிடையே, நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சந்தீப் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கரை ரூ.3½ கோடிக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பர்கர் 6 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஸ்விட்சர்லாந்தின்விக்டோரிஜா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த நவோமி ஒசாகா அடுத்த இரு செட்களை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் எலிஸ்பெட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் பவுலா படோசா விலகினார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோத இருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

    பவுலா படோசா தரவரிசையில் 10-வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
    • லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
    • பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக டாஸ் போட தாமதமானது.

    டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்னில் அவுட்டானார்.

    பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

    பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    • மழை பெய்த போதிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    • போட்டி 8.30 மணிக்கு தொடங்குகிறது. ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

    ஐபிஎல் சீசனின் 58ஆவது ஆட்டம் இன்று தரம்சாலாவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டப்படவில்லை. அதனைத்தொடர்ந்து போட்டி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. பின்னர் மழை நின்றதும் போட்டியை நடத்துவதற்கான பணியை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    மைதானம் தயாரானதால் 8.15 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    • புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 3ஆவது இடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் சீசனின் 58ஆவது ஆட்டம் இன்று தரம்சாலாவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து போட்டி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ×