என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சந்தீப் சர்மாவுக்கு பதில் இவர்: ராஜஸ்தான் அணியில் இணையும் நன்ரே பர்கர்
- சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து சந்தீப் சர்மா விலகினார்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
மேலும் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதற்கிடையே, நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சந்தீப் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கரை ரூ.3½ கோடிக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பர்கர் 6 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.






