என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம் பெறவில்லை.

    மும்பை அணியின் ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.

    அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், மறுமுனையில் விளையாடிய ரிக்கெல்டன் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 6.4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா 27 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் நமன் திர் ஜோடி சேர்ந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்திருந்தது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 159 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 73 ரன்களும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • பிளேஆஃப் போட்டிகளில் பட்லர் விளையாடமாட்டார்.
    • மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் 10 நாட்கள் கழித்து நடத்தப்பட்டு வருகிறது. இதனால் முந்தைய போட்டி அட்டவணையை விட நாட்கள் அதிகமாகியுள்ளன.

    இதன் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார். இவர் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அணி கவலைப்படவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மேத்யூ வேட் கூறுகையில் "நாங்கள் நிச்சயமாக கவலைப்படவில்லை. ஏற்கனவே கில், சாய் சுதர்சன் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அணியில் உள்ள வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, அபாரமான ஃபார்மில் இருக்கும் அவர்கள், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

    முதல் மூன்று இடங்களில் களம் இறங்கும் வீரர்கள் மெஜாரிட்டியான ரன்களை அடிக்கும்போது சிறப்பானதாக இருக்கும். பட்லர் சென்ற பிறகு, 3ஆவது இடத்தில் களம் இறங்க மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் களம் இறங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.

    பாசிட்டிவ் விசயம் என்னவென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ரூதர்போர்டு ஷெர்ஃபேன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

    • நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை.
    • நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும்.

    ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பின் ஐந்து தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் லக்னோவை வீழ்த்தியது. அதன்பின் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. 12ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.

    இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வருகிற 25ஆம் தேதி கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் நாங்கள் விளையாடிய விளையாட்டிற்கு கடைசி இடம் பொருத்தமானது என சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிளமிங் கூறுகையில் "நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தை மட்டுமே விரும்பினோம். சில வீரர்களின் ஆட்டங்களை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும். நாங்கள் அந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், எனவே அதிலிருந்து மறைந்து செல்ல முடியாது" என்றார்.

    • புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், பும்ரா.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ், அஷுடோஸ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், சமீரா, முஷ்டாபிஜுர் ரஹ்மான், முகேஷ் குமார்.

    • ரோகித் சர்மா, கோலி, அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளனர்.
    • புதிய கேப்டனுடன் இளம் வீரர்கள் அடங்கிய அணி இங்கிலாந்து செல்ல இருக்கிறது.

    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த நிலையில், இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரம் ரத்தோர் கூறுகையில் "இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்கப் போவது இல்லை. ஏனென்றால் சீனியர் வீரர்கள் 3 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆகவே, இளம் அணி விளையாட இருக்கிறது. புதிய கேப்டன் அணியை வழி நடத்த இருக்கிறார்.

    இந்த அனைத்து விசயங்களும், கூடுதலாக நெருக்கடியை ஏற்படுத்தும். இருந்தபோதிலும், இளம் வீரர்கள் தங்களுடைய திறமை மற்றும் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

    • தகுதி சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில் சுமித் நாகல் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தினார்.
    • இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஆஸ்திரியா வீரரை சுமித் நாகல் எதிர் கொண்டார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

    • ஆண்களுக்கான முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் சிங்கபூர் வீரரான ஜேசன் டெஹ் ஜியா ஹெங் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் ராஜாவத் 15-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, வியட்நாமின் நுயான் துய் லின் உடன் மோதினார். முதல் செட்டை வியட்நாம் வீராங்கனையும் 2-வது செட்டை சிந்துவும் வெற்றி பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை வியட்நாம் வீராங்கனை வென்றார். இதன்மூலம் 21-11, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி வியட்நாம் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.  

    • 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் திடீரென அறிவித்தார். அவரைதொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் ஓய்வு முடிவை வெளியிட் டார்.

    இருவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடுவார்கள்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தோனி பாணியில் அவர் ஓய்வு பெறும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) பரிந்துரை செய்து உள்ளார். ஆனால் பி.சி.சி.ஐ. அதை நிராகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார். இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. இங்கிலாந்து தொடரில் அவரை கேப்டனாக இல்லாமல் வீரராகவே தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் தான் ரோகித் சர்மா திடீர் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

    • எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
    • இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன.

    எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

    இந்நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை - டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால்

    முன்னதாக, பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த பெங்களூரு - ஐதாராபாத் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.

    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது தோனியின் காலை தொட்டு வைபவ் சூர்யவன்ஷி வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
    • மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

    இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு லீக்கிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 15 புள்ளியை தான் தொட முடியும்.

    மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (510 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மாவும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு கம்பீரமாக பயணித்தது. அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடுகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (493 ரன்) நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ் அவ்வப்போது பங்களிப்பு அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், கேப்டன் அக்ஷர் பட்டேல் வலு சேர்க்கிறார்கள். முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    இந்த சீசனில் உள்ளூரில் கடைசி ஆட்டத்தில் ஆடும் மும்பை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதுடன், பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்ய தீவிரம் காட்டும். டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்று இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் வாழ்வா - சாவா? நிலையில் களம் காணும் டெல்லி அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்கும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், டெல்லி 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் வான்கடேவில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வாகை சூடியிருக்கிறது.

    இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பையில் நேற்று மழை செய்தது. அங்கு அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், டி.நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், துஷ்மந்தா சமீரா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நடப்பி ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
    • சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

    இந்நிலையில், 2022ம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு சீசனிலும் அதிகபட்சமாக 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது

    நடப்பி ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

    சி.எஸ்.கே. அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் தொடர்கள்

    2022 - 10 தோல்விகள்

    2025 - 10* தோல்விகள்

    2012 - 8 தோல்விகள்

    2020 - 8 தோல்விகள்

    ×