என் மலர்
விளையாட்டு
- பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம்.
- கூடுதலாக விக்கெட் இழந்ததால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:
நாங்கள் இன்று பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் என நினைக்கின்றேன். ஏனென்றால் விக்கெட்டுகளை நாங்கள் அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விக்கெட்டுகள் அதிகம் இழப்பதன் மூலம் 20 ஓவரும் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார்.
எங்கள் அணியின் ரன்ரேட்டும் நன்றாகத்தான் இருந்தது. பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம். கூடுதலாக விக்கெட் இழந்ததால் எங்களால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை.
பவர்பிளேவில் நாங்கள் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம். முதல் ஆறு ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.
பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கன்சிஸ்டன்டுடன் விளையாட வேண்டும்.
உங்களால் சிக்சர்களை எந்த நிலையிலும் அடிக்க முடியும் .உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை செலுத்திக் கொள்ளாதீர்கள். சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- டென்னிஸ் தரவரிசையில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
- ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது.
இதில் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அரினா சபலென்கா நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலி ஓபன் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் கோகோ காப் 2வது இடம் பிடித்துள்ளார்.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 3வது இடத்தையும், இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ்மின் பவுலினி 4வது இடத்தையும் கைப்பற்றினார்.
போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது இடத்தில் இருந்து நம்பர்-5 இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர் சமீபத்தில் முடிந்த இத்தாலி ஓபனில் 3வது சுற்றோடு திரும்பினார்.
கடந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிறகு ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார்.
ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்னும், சஞ்சு சாம்சன் 41 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மிட்செல் க்ரூகர் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த தகுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை அடுத்த தகுதிச்சுற்றில் சுமித் நாகல், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதுகிறார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் 253 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் 62ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
சிஎஸ்கே-யின் ஸ்கோர் 13.4 ஓவரில் 137 ரன்னாக இருக்கும்போது பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷிபம் துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.
16ஆவது ஓவரை ரியான் பராக் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார் எம்.எஸ். தோனி. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த போட்டியில் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 253 சிக்சர்கள் அடித்துள்ளார். 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரகி்கெட்டில் கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 280 சிக்சர்களும், விராட் கோலி 272 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
- ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஊர்வில் படேல் 0 ரன்னில் அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் தோனியும் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார்.
- அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 7.3 ஓவரில் திக்வேஷ் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் மைதானத்திலேயே திக்வேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் மற்றும் வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றிருந்த திக்வேஷ் ரதி இதனையும் சேர்த்து 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால் ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாகவும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது.
- இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
- பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி உள்பட 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன.
- மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னாசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால் பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்த போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிர் நடைபெறும்.
- குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிலும், குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
- இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவை முடிந்தவரை துண்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் கூட லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் அட்டவணையை உருவாக்கும்படி வலியுறுத்தியது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வளரும் அணிகளுக்கான (பெண்கள்) ஆசிய கோப்பை போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொசின் நவ்வி, அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ஆசிய போட்டியை இந்தியா புறக்கணிக்க இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறுகையில், 'இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்பதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் இன்று (நேற்று) காலை எங்களது கவனத்துக்கு வந்தது.
இப்போதைக்கு அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆசிய கோப்பை போட்டி குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருக்கிறது. ஆசிய கோப்பை குறித்து எந்த மட்டத்திலும் ஆலோசிக்கப்படவில்லை. இந்த செய்திகள் எல்லாம் யூகம் மற்றும் கற்பனையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.
- ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
- பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.






