என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு
    X

    சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு

    • இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    Next Story
    ×