என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

நாங்கள் விளையாடியதற்கு கடைசி இடம் பொருத்தமானது: பிளமிங்
- நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை.
- நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும்.
ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பின் ஐந்து தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் லக்னோவை வீழ்த்தியது. அதன்பின் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. 12ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வருகிற 25ஆம் தேதி கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் நாங்கள் விளையாடிய விளையாட்டிற்கு கடைசி இடம் பொருத்தமானது என சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிளமிங் கூறுகையில் "நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தை மட்டுமே விரும்பினோம். சில வீரர்களின் ஆட்டங்களை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும். நாங்கள் அந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், எனவே அதிலிருந்து மறைந்து செல்ல முடியாது" என்றார்.






