என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் மனு பாக்கர் இறுதிச்சுற்றில் 6வது இடம் பிடித்தார்.

    முனீச்:

    3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நேற்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.

    தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் 5வது இடம்பெற்று டாப் 8 பட்டியலில் இடம்பிடித்தார்.

    மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.
    • கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை மற்றும் மதுரை அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளன.

    இந்நிலையில், டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகிறது.

    • விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது- மியான்டட்.
    • அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர்- அப்ரிடி.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஜாவித் மியான்டட் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விராட் கோலியை பாராட்டியுள்ளனர்.

    விராட் கோலி குறித்து மியான்டட் கூறியதாவது:-

    விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது. தான் மிகவும் நேசித்த விளையாட்டை திடீரென விட்டுச் செல்வது, கதையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. என் பார்வையில், அவர் 2027 இறுதி வரை எளிதாக விளையாடியிருக்கலாம். நிச்சயமாக, அவருக்கு ஒரு கடினமான சூழ்நிலை இருந்தது.

    இவ்வாறு மியான்தத் தெரிவித்துள்ளார்.

    ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-

    விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரியவர். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள், அவர்கள் விசேசமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர் முன்பு கோபக்காரராக இருந்தார்.

    சுனில் கவாஸ்கர் கூட ஒருமுறை அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, விராட் கோலி நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதிக மரியாதைக்கு தகுதியானவர்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    முதல் செசனில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு களம் இறங்கிய உடனே ஸ்மித் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலியா 150 ரன்னுக்குள் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.

    ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். யான்சன் 7.2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3ஆவது சுற்றோடு போபண்ணா ஜோடி வெளியேறியது.
    • இதனால் தரவரிசையில் 20 இடங்களில் சரிந்து 53ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா. இவர் ஒற்றையர் பிரிவில் அதிக அளவில் சாதிக்கவில்லை என்றாலும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ஏடிபி தரவரிசையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து 50 தரவரிசைக்குள் இருந்து வந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் 3ஆவது சுற்றோடு போபண்ணா ஜோடி வெளியேறியது. இதனால் தரவரிசையில் 20 இடங்களில் சரிந்து 53ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

    கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 50 தரவரிசைக்குள் இருந்து வந்தார். தற்போது 20 இடங்கள் சரிவை சந்தித்து 53 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் 15 வருடத்திற்குப் பிறகு முதல்முறைாக டாப் 50 பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    • 29 வயதான நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்தார்.
    • அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி 2025 தொடருக்கான MI நியூயார்க் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக் கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலைியல் அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 லீக் தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2023ஆம் ஆண்டும் எம்எல்சி தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் 388 ரன்கள் விளாசி அதிக ரன்கள் விளாசி வீரராக திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் அடித்து எம்ஐ நியூயார்க் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டராக திகழ்ந்து வருகிறார். 2024ஆம் ஆண்டு அனைத்து டி20 போட்டிகளிலும் 170 சிக்சர்கள் விளாசினார். 2025 ஐபிஎல் சீசனில் முதன்முறையாக 500 ரன்களை கடந்தார். 40 சிக்சர்கள் விளாசினார்.

    2025 எம்எல்சி சீசன் நாளை தொடங்குகிறது. 13ஆம் தேதி எம்ஐ நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    • ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    • கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.

    கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை (short ball) சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன்.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம்- பவுமா
    • 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்- கம்மின்ஸ்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    "வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். சிறந்த காம்பினேசன் அணியை தேர்வு செய்துள்ளோம். 15 வீரர்களும் நம்பிக்கையாக உள்ளனர். இது மிகப்பெரிய இறுதிப் போட்டி. ரசிகர்களுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்" என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் "முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சிதான். மேக மூட்டமாக இருந்தாலம், சிறந்த ஆடுகளம் போன்று தோன்றுகிறது. 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்" என்றார்.

    ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

    தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    மார்கிரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
    • இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

    தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.

    மற்ற ஆட்டங்களில் பொலிவியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் ,உருகுவே 2-0 என்ற கணக் கில் வெனிசுலாவையும் தோற்கடித்தன. அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் அந்த அணி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது.

    • 2-வது டி20யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது
    • டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து / England whitewashed West Indies in T20

    ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெண் டக்கெட் 84 ரன்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரிலும் அனைத்து போட்டிகளில் வென்று ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடி காட்டியுள்ளது.

    ஒருநாள் தொடரில் ஜோ ரூட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு ருதுராஜ் விளையாடவுள்ளார்.
    • ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார்

    இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட அந்நாட்டின் பிரபல யார்க்ஷயர் (Yorkshire) கிளப்பில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.

    இதன் மூலம் சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு விளையாடும் 4வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார் என்றும் இந்த சீசன் முடியும் வரை அவர் அணியில் இருப்பார் என்று யார்க்ஷயர் கிளப் தெரிவித்துள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
    • லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.

    ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

    தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

    ×