என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயரை சேர்த்திருக்க வேண்டும்: கங்குலி
- ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.
கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை (short ball) சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன்.
இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.






