என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருவதாகவும் டி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஷேன் வாட்சன் வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி துரதிர்‌‌ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது முக்கியமான நிகழ்வு. ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இணைந்ததால், அணி வலுவடைந்து உள்ளது. இந்திய அணியில் துடிப்பான வீரர்கள் உள்ளனர். மேலும் அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் வந்துள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தேன். தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியால் ஏராளமான வீரர்களின் திறமை வெளிஉலகுக்கு தெரிந்துள்ளது. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கிறது. தமிழக கிரிக்கெட் அணி நன்றாக முன்னேறி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி இளமையான நிர்வாகி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் நேர்த்தியான ஆட்டத்திறன் மிகவும் பிடிக்கும். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். அவரது தலைமை பண்பு, போராடும் குணம் மிகவும் கவர்ந்தது.

    இவ்வாறு வாட்சன் கூறினார்.
    கூடுதலாக ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்களை நடத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆலோசனை கூட்டம் துபாயில் 6 நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு (2031-ம் ஆண்டு வரை) வருங்கால போட்டி அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மற்ற நாட்டு நிர்வாகிகள் முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர்.

    இதன்படி மேற்கண்ட 8 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும். இரண்டு 50 ஓவர் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இவற்றுடன் கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொடரும் 50 ஓவர் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. முன்னணி 6 அணிகள் பங்கேற்கும் வகையில் மினி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கலாம் என்று தெரிகிறது.

    உலக அளவிலான போட்டியை நடத்தும் போது டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐ.சி.சி.க்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்து தான் பெற முடியும். ஆனால் இரு நாட்டு தொடர் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.

    “ஐ.சி.சி.யின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம் இரு நாட்டு தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது மட்டுமின்றி மற்ற நாடுகளிடம் ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தை கிரிக்கெட் வாரியம் காப்பாற்ற விரும்புகிறது. ஐ.சி.சி. போட்டிகளை அதிகப்படுத்துவதால் அது இரு நாட்டு தொடர்களை நிச்சயம் பாதிக்கும். எனவே இது குறித்து ஆலோசிக்க வேண்டும். தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வு நடைமுறையில் உள்ளது. இந்த விவகாரத்தில் புதிய தலைவரே இறுதி முடிவை எடுப்பார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல்அதிகாரி ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் ஐ.சி.சி.யின் புதிய போட்டி அட்டவணை குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டி இருக்கும். இந்த சிக்கலை அவர் எப்படி சாதுர்யமாக கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
    சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
    மும்பை:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    இந்திய வீரர் அடில் கான் ஆட்டத்தின் இறுதியில் அடித்த கோல் மூலம் கொல்கத்தாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
    கொல்கத்தா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

    இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.

    இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டம் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

    இந்த போட்டியில் வங்காளதேசம் சார்பில் 42-வது நிமிடம் சாத் உத்தின் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் அடில் கான் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்து, வங்காளதேசத்தின் வெற்றியை தடுத்து நிறுத்தினார்.
    இரண்டு டெஸ்டிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா? என்பது தெரியவில்லை என ரபாடா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென்ஆப்பிரிக்கா அணியால் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் இதற்கு மேல் எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை என தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரபாடா கூறுகையில் ‘‘போதுமான அளவு நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தோம். இதற்கு மேல் எங்களால் மேலும் நெருக்கடி கொடுக்க முடியுமா? என்பது எனக்குத் தெரியவில்லை.

    பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல. பந்து வீச்சாளர்களும் எங்களை துவம்சம் செய்துவிட்டனர். அவர்கள் பந்தை சிறப்பான வகையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களின் ஒட்டுமொத்த தாக்குதலும் எங்களை ஒவ்வொரு விஷயத்திலும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

    இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்போது அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கையாண்டனர். எங்களால் சிறப்பான முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை. எங்களுடைய முக்கியமான ஆயுதமே அதுதான்’’ என்றார்.
    கால்பந்து வாழ்க்கையில் 700-வது கோலை பதிவு செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாதனை என்னை நோக்கி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
    கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்று உக்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் கால்பந்து வாழ்க்கையில் தனது 700-வது கோலை பதிவு செய்து சாதனைப் படைத்தார்.

    உலகளவில் 700-வது கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கமானது. நான் அதை எதிர்பார்த்து இருப்பதில்லை. அது என்னை நோக்கி வரும்.

    அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை எட்ட இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் இது சிறப்பானதுதான். என்றாலும், உக்ரைனுக்கு எதிராக 1-2 எனத் தோல்வியடைந்ததால், கசப்பான இனிப்பு.

    நாங்கள் உக்ரைனுக்கு எதிராக சிறப்பாக விளையாடினோம். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ, அனைத்தையும் செய்தோம். எங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்தது’’ என்றார்.

    ரொனால்டோ

    கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக்கில் 127 கோல்கள் அடித்துள்ளார். தனது முதல் கிளப் அணியான ஸ்போர்ட்டிங் அணிக்காக 2002-03-ல் ஐந்து கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 232 போட்டிகளில் 118 கோல்கள் அடித்துள்ளார்.

    அதன்பின் ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்துள்ளார். தற்போது விளையாடி வரும் யுவான்டஸ் அணிக்காக 51 போட்டிகளில் 32 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் அணிக்காக 95 கோல்கள் அடித்துள்ளார்.
    கேப்டனாக செயல்பட்ட அஸ்வினை டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிக்கு விற்க இருந்த முடிவை மாற்றியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களில் கேப்டனாக செயல்பட்டார்.

    இவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விற்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முடிவு செய்தது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலேயே அஸ்வின் இருப்பார் என உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நெஸ் வாடியா கூறுகையில் ‘‘கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் மறுசிந்தனை செய்து, அணியின் ஒரு அங்கமாக அஸ்வினை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அதில் நல்ல முடிவு எட்டப்படவில்லை’’ என்றார்.
    ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக செயல்பட ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த 2018-ல் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது.

    இதில் கேப்டனாக பணியாற்றிய ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் சேர்த்துள்ளார்.

    ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஸ்மித் 774 ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ஸ்மித் மீண்டும் கேப்டனாக பணியாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீண்டும் கேப்டனாக பணியாற்ற முன்னாள் வீரர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் ரிக்கி பாண்டிங்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் டிம் பெய்ன் எவ்வளவு நாட்கள் விளையாடுவார் என்பதை பொறுத்துதான். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.

    வரும் கோடைக்காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக அளவில் ரன்கள் குவித்தால், இன்னும் சில வருடங்கள் விளையாடுவார்.

    ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டுதான் முடிவு எடுக்க வேண்டும். டிம் பெய்னுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித்திடம்தான் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.

    கேப்டன் பொறுப்பில் இன்னும் சில விஷங்கள் முடிக்கப்படாமல் இருப்பதாக ஸ்மித் உணர்வதாக நான் நினைக்கிறேன். ஸ்மித் கேப்டன் பதவியை பெற விரும்பினால், அதுகுறித்து அதிகாரிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் தலைவராக இருப்பது சிறப்பான முன்னேற்றம் என சிஒஏ வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஒருமனதாக கங்குலி போட்டியின்றி தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு கிரிக்கெட் நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய், கங்குலி தலைவராக பொறுப்பு ஏற்க இருப்பது சிறப்பான முன்னேற்றம் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகப்பெரிய முன்னேற்றம். முன்னாள் வீரர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை நடத்திய அனுபவம் உள்ள ஒருவர் பிசிசிஐ-யின் நிர்வாகத்திற்கு வருவது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

    கடந்த காலம் பற்றி எனக்குத் தெரியாது. நான் எதிர்காலத்தை பார்க்கிறேன். கடந்த காலத்தில் நான் எதையும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் முன்னாள் வீரர் மட்டுமல்ல. தலைசிறந்த கேப்டன். கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்’’ என்றார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தவறுகளில் இருந்து நன்றாக பாடம் கற்றுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 11 முறை சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் சோயிப் அக்தர் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவர் சிறந்த கேப்டனாக மாறுவார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். சிறப்பாக கற்று கொண்டிருக்கிறார்.

    டீம் காம்பினேசன், பேட்டிங் ஆர்டரை எப்படி அமைப்பது என்பது குறித்து பாடம் கற்றுள்ளார். உலகில் அவர்தான் சிறந்த கேப்டன். ஆனால், அவரைச் சுற்றி அங்கே ஏராளமான மோசமான கேப்டன்கள் உள்ளனர்.

    தற்போதைய காலத்தில் சாதாரணமானவர்களை பெரும்பாலான அணிகள் கேப்டன்களாக நியமித்துள்ளது. இதை பார்க்க வேதனையாக உள்ளது. கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்கள் இல்லை’’ என்றார்.
    ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகள் நடைபெற இருப்பதால், அதற்கான செலவில் பாதியை இலங்கையிடம் கேட்க பாகிஸ்தான் விரும்புகிறது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பாகிஸ்தானில் நடைபெற்றது. மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்திற்குள் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும்  பாகிஸ்தான் மண்ணில் நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டது என்று அந்த அணியின் தலைவர் கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஏமாற்றம் அளித்தது என பதில் கூறியிருந்தது.

    பாகிஸ்தான் சென்று இலங்கை விளையாடுவது இன்னும் உறுதியாக நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்தினால் செலவில் பாதியை இலங்கை கேட்க பாகிஸ்தான் போர்டு விரும்புகிறது.

    இலங்கை அணி 2009-ல் பாகிஸ்தான் சென்று வியைாடும்போது பயங்கரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தினார். அதன்பிறகு தற்போதுதான் இலங்கை அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
    பிசிசிஐ-யின் செயலாளராக அமித் ஷாவின் மகன் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் போட்டியிடுகின்றனர்.

    இருவரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

    அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்தின் மகனும், தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யும் ஆன கார்த்தி சிதம்பரம், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது தந்தை காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி ஆட்சியில் உள்துறை மந்திரியாக இருந்தபோது, நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேசியவாதம் பேசக்கூடியவர்கள், எப்படி எதிர்வினையாற்றிருப்பார்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கு கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை ஞாபகப்படுத்தி டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
    ×