என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர், என்னிடம் ‘நீ ஒரு முட்டாள்’ என்று திட்டினார் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ். பெர்த்தில் உள்ள வாகா (WACA) மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடினார். போட்டியின்போது வீரர்கள் அறையில் இருந்த கல்தூணை வலது கையால் ஓங்கி குத்தினார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காயத்தால் மிட்செல் மார்ஷ் ஆறு வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் என்னை முட்டாள் என திட்டினார் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில் ‘‘அவர் என்னிடம் வந்து நீ ஒரு முட்டாள் என்று சுறுக்கமாக ஒரு வார்த்தையால் திட்டிவிட்டுச் சென்றார். என்னுடைய செயல்பாடு குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தார். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்பது உறுதி’’ என்றார்.

10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘T10’ லீக்கில் விளையாடி வருகிறார்.
இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறாமல் இருக்கிறது. உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்றால் நீண்ட நாட்கள் ஆகும் என்பதும் இடம் பெறாததற்கு ஒரு காரணம்.
இந்நிலையில் பிரபலமாகி வரும் ‘T20’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெறுவது மிகவும் சிறப்பான அம்சமாகும். ஒலிம்பிக்கில் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது சொந்த நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும்.
டி20 கிரிக்கெட்டை விட T20 மிகவும் குறுகிய கால போட்டி. பேட்ஸ்மேன்கள் குறுகிய நேரத்தில் விரைவாக விளையாட வேண்டும். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடலாம். ஒவ்வொரு டெலிவரியையும் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து திட்டம் அமைக்க பந்து வீச்சாளருக்கும், பீல்டிங் அணிக்கும் சாதகமானதாக இருக்கும்’’ என்றார்.

தமிழ் தெரியாதா என டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பெண் வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது. இதில் மிதாலி ராஜ் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அணியை வெற்றிகரமாக வழிநடத்துதல் மற்றும் சிறப்பான முறையில் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மிதாலி ராஜ்-க்கு ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் தெண்டுகல்கர் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார்.
பாராட்டு தெரிவித்திருந்த சச்சினுக்கு, மிதாலி ராஜ் நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என் வாழ்வில் நான் பின்பற்றிய ஒருவரே என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சாம்பியன்’’ என பதிவிட்டிருந்தார்.
இதுபோன்று பலரும் வாழ்த்து கூறினார்கள். இதற்கிடையே ஒருவர் ‘‘உங்கள் தாய்மொழி தமிழாக இருக்கையில் நீங்கள் இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் மட்டும் பேசுகிறீர்களே.... உங்களுக்கு தமிழ் தெரியாதா?” என கேலி செய்யும் வகையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தக்க பதிலடி கொடுத்த மிதாலி ராஜ், தமிழில் ஒரு டுவிட்டை பதிவிட்டார். அதில் ”தமிழ் என் தாய்மொழி..நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” இவ்வாறு அதில் கூறிப்பிட்டிருந்தார்.
தமிழ் என் தாய் மொழி..
— Mithali Raj (@M_Raj03) October 15, 2019
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going https://t.co/udOqOO2ejx
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.
இதில் பிவி சிந்து 22-20, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 38 நிமிடங்களே தேவைப்பட்டது. கிரேகோரியா மரிஸ்காவுக்கு எதிராக மோதியுள்ள ஐந்து போட்டிகளிலும் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
17 வயது ஆகும் (17 வருடம் 292 நாட்களே) ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் கேரளா அணியின் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விஜய் ஹசாரே டிராபியில்தான் அறிமுகம் ஆனார். இவர் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் மூலம் 504 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள டேராடூவில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் அணியில் இருந்து டாரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த கேப்ரியலுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-
ஹோல்டர் (கேப்டன்), ஹோப், கேம்ப்பெல், பிராத்வெயிட், ஹெட்மயர், புரூகஸ், ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் சுனில் அம்பரிஸ், ஜோமல் வாரிகன், கார்ன்வெல், கேமர்ரோச், கீமோ பவுல், அல்ஜாரி ஜோசப்.
நவம்பர் 5-ந்தேதி 20 ஓவர் தொடரும், 13-ந்தேதி ஒருநாள் தொடரும் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் ஹர்பஜனை முந்த அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
ராஞ்சி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின்.
33 வயதான சென்னையை சேர்ந்த அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்திற்கான இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அஸ்வின் டெஸ்டில் மட்டுமே ஆடி வருகிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. அஸ்வின் 14 விக்கெட் கைப்பற்றி இரண்டு டெஸ்டிலும் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட்டும் (முதல் இன்னிங்சில் 7 +இரண்டாவது இன்னிங்ஸ் 1), புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டும் (முதல் இன்னிங்சில் 4 + இரண்டாவது இன்னிங்ஸ் 2) எடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 4-வது இடத்தை பிடித்தார். 9 டெஸ்டில் அவர் 52 விக்கெட்டை தொட்டார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 3-வது இடத்தில் உள்ள ஹர்பஜன்சிங்கை முந்துவது தற்போது அஸ்வினின் இலக்காக இருக்கிறது. ஹர்பஜன்சிங் 11 டெஸ்டில் 60 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
அவரை முந்துவதற்கு அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட் தேவை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் இந்த விக்கெட்டை எடுத்து சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 67 டெஸ்டில் விளையாடி 356 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கும்பளே 619 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 417 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின் உள்ளார்.
அஸ்வினுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டில் அவர் இதுவரை இரண்டு டெஸ்டில் மட்டுமே ஆடினார். அடுத்து வங்காளதேசத்துடன் உள்ளூரில் 2 டெஸ்டில் விளையாடுகிறார். இதனால் அஸ்வின் விரைவில் 400 விக்கெட்டை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன் கூறியுள்ளார்
சென்னை:
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டிருந்தது. ஹேக்கர்கள் அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயே அது மீட்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரது ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கும் திடீரென முடக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல ஆபாசபடங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. ஹேக்கர்களின் இந்த செயலால் வாட்சன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். முதலில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும். ஆனால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி அரசியல் ஆதாயத்தால் கிடைக்கவில்லை என்று சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தா:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பவருமான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
வருகிற 23-ந்தேதி மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
இதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனும் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவரான ஜெய்ஷா செயலாளராகவும், மத்திய மந்திரி அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் சங்க தலைவரான அருண் சிங் துமால் பொருளாளராகவும் கேரள கிரிக்கெட் சங்க தலைவரான ஜெய்யேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பிரிஜேர் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக தேர்வானார்.
இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷாவை சந்தித்து 1 மணி நேரம் பேசிய பிறகு தான் கங்குலிக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி ஒரு மனதாக கிடைத்தது. அதற்கு முன்புவரை அந்த பதவிக்கு போட்டி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
மேலும் கங்குலி பா.ஜனதாவில் சேரபோவதாகவும், அவரை மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தப்போவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி அரசியல் ஆதாயத்தால் கிடைக்கவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்துக்களை கேட்டேன். நாங்கள் இருவரும் அரசியல் பேசவில்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்திப்பை அரசியலுடன் தொடர்புபடுத்துவது தவறானது.
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்காக நான் அவரை சந்திக்கவில்லை. எந்தவித அரசியல் நோக்கத்திலும் எனக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி கிடைக்கவில்லை.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருவதாகவும் டி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஷேன் வாட்சன் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது முக்கியமான நிகழ்வு. ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இணைந்ததால், அணி வலுவடைந்து உள்ளது. இந்திய அணியில் துடிப்பான வீரர்கள் உள்ளனர். மேலும் அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் வந்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தேன். தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியால் ஏராளமான வீரர்களின் திறமை வெளிஉலகுக்கு தெரிந்துள்ளது. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கிறது. தமிழக கிரிக்கெட் அணி நன்றாக முன்னேறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி இளமையான நிர்வாகி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் நேர்த்தியான ஆட்டத்திறன் மிகவும் பிடிக்கும். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். அவரது தலைமை பண்பு, போராடும் குணம் மிகவும் கவர்ந்தது.
இவ்வாறு வாட்சன் கூறினார்.

கூடுதலாக ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்களை நடத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆலோசனை கூட்டம் துபாயில் 6 நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு (2031-ம் ஆண்டு வரை) வருங்கால போட்டி அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மற்ற நாட்டு நிர்வாகிகள் முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர்.
இதன்படி மேற்கண்ட 8 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும். இரண்டு 50 ஓவர் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இவற்றுடன் கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொடரும் 50 ஓவர் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. முன்னணி 6 அணிகள் பங்கேற்கும் வகையில் மினி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கலாம் என்று தெரிகிறது.
உலக அளவிலான போட்டியை நடத்தும் போது டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐ.சி.சி.க்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்து தான் பெற முடியும். ஆனால் இரு நாட்டு தொடர் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.
“ஐ.சி.சி.யின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம் இரு நாட்டு தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது மட்டுமின்றி மற்ற நாடுகளிடம் ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தை கிரிக்கெட் வாரியம் காப்பாற்ற விரும்புகிறது. ஐ.சி.சி. போட்டிகளை அதிகப்படுத்துவதால் அது இரு நாட்டு தொடர்களை நிச்சயம் பாதிக்கும். எனவே இது குறித்து ஆலோசிக்க வேண்டும். தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வு நடைமுறையில் உள்ளது. இந்த விவகாரத்தில் புதிய தலைவரே இறுதி முடிவை எடுப்பார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல்அதிகாரி ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் ஐ.சி.சி.யின் புதிய போட்டி அட்டவணை குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டி இருக்கும். இந்த சிக்கலை அவர் எப்படி சாதுர்யமாக கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
மும்பை:
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.