search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்சன்
    X
    வாட்சன்

    கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது - ஷேன் வாட்சன்

    கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருவதாகவும் டி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஷேன் வாட்சன் வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி துரதிர்‌‌ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது முக்கியமான நிகழ்வு. ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இணைந்ததால், அணி வலுவடைந்து உள்ளது. இந்திய அணியில் துடிப்பான வீரர்கள் உள்ளனர். மேலும் அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் வந்துள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தேன். தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியால் ஏராளமான வீரர்களின் திறமை வெளிஉலகுக்கு தெரிந்துள்ளது. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கிறது. தமிழக கிரிக்கெட் அணி நன்றாக முன்னேறி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி இளமையான நிர்வாகி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் நேர்த்தியான ஆட்டத்திறன் மிகவும் பிடிக்கும். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். அவரது தலைமை பண்பு, போராடும் குணம் மிகவும் கவர்ந்தது.

    இவ்வாறு வாட்சன் கூறினார்.
    Next Story
    ×