search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத் ராய்"

    பிசிசிஐ-யின் சிஇஓ மற்றும் மாநில சங்கங்கள் இடையிலான பிரச்சனையில் மத்தியஸ்தராக மூத்த வக்கீல் பிஎஸ் நரசிம்மாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் லோதா தலைமையிலான ஒரு கமிட்டியை நியமித்தது.

    இந்த கமிட்டி பல பரிந்துரைகளை ஒரு அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ பதவிகளில் போட்டியிடக் கூடாது, இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்கக்கூடாது, அரசியல் பதவியில் இருக்கும் நபர் தலைவராக இருக்கக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு போன்ற முக்கியமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது.

    இதனால் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜனதா எம்பி அனுராக் தாகூர் தனது பதவியில் இருந்து விலகினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் உள்பட பலருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் லோதா கமிட்டி பரிந்துரையை மாநில சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பரிந்துரைகளை செயல்படுத்த வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. நான்கு பேரில் இரண்டு பேர்தான் தற்போது அந்தக்குழுவில் உள்ளன. ஒருவர் தலைவர் வினோத் ராய், மற்றொருவர் டயானா எடுல்ஜி.

    இவர்களால் பிசிசிஐ-யில் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ-யின் பெரும்பாலான முடிவுகளை வினோத் ராய்தான் எடுக்கிறார். மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி ஒதுக்குவதில் சில பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டடுள்ளது.

    இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    நிர்வாகக்குழுவுக்கும், மாநில சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மூத்த வக்கீலான பிஎஸ் நரசிம்மாவை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. மேலும், பிசிசிஐ பிரச்சனையை தீர்க்க குறைதீர் அதிகாரியாக (amicus) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி டி கே ஜெயினுக்கும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டா? அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீக்கா? என்று வெளிநாட்டு வீரர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ ஆலோசனை செய்துள்ளது. #IPL2019
    புல்வாமா பயங்கரவாதி தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதனால் அனைத்து வகை விளையாட்டிலும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.

    குறிப்பாக பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடர் கிடையவே கிடையாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா? என்று ஆலோசித்து வருகிறது.

    பிசிசிஐ சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடுகிறார்கள். ஏபி டி வில்லியர்ஸ் முதன்முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கைவிட ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடக்கூடாது என்று வலியுறுத்த பிசிசிஐ கருதியது.

    இதுகுறித்து பிசிசிஐ-யின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி, குறைதீர்க்கும் அதிகாரி, பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிசிசிஐ இதில் உறுதியாக இருந்திருந்தால் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிஓஏ-விற்கு பரிந்துரை செய்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.

    தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.

    மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.

    சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைய இருக்கிறார். இந்தியா ‘ஏ’ அணியில் கேஎல் ராகுல் சேர்கிறார். #HardikPandya
    இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான சர்ச்கைக்குரிய கருத்துக்களை கூறியதாக விமர்சனம் எழும்பியது. இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு சொந்த நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இருவர் மீதான தடை நீக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழு அதிகாரி வினோத் ராய் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பிசிசிஐ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து செல்கிறார். நாளை நடக்கும் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28-ந்தேதி நடைபெறும் 3-வது போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    அதேசமயம் லோகேஷ் ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக பிசிசிஐ அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
    ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சிகே கண்ணா கேட்டுக்கொண்டுள்ளார் #HardikPandya
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார்கள். ஆனால், இருவர் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணா இருவருக்கும் ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து சிகே கண்ணா கூறுகையில் ‘‘அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்களை நாம் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். தவறுக்காக எந்தவித நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களுடைய கேரியர்ஸ்-க்கு தடை போடக்கூடாது’’ என்றார்.
    பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி சஸ்பெண்ட் ஆகியுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
    ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தது பெரும் பிரச்சனையாக விசுவரூபம் எடுத்துள்ளது. வீரர்கள் தங்களது செக்ஸ் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசியது இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பை குலைப்பதாகும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய இரண்டு வீரர்களையும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அந்த இருவரையும் உடனடியாக நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வீரர்கள் இருவரின் பேச்சுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த மாதிரியான விஷயங்களை நாங்கள் நண்பர்களுடன் கூட பேசமாட்டோம். ஆனால் இவர்களோ பலரும் பார்க்கும் டெலிவிஷன் நிகழ்ச்சியில் இப்படி பேசி இருக்கிறார்கள். தற்போது இதனைப் பார்த்த பொதுமக்கள் கிரிக்கெட் வீரர்கள் பற்றி என்ன நினைப்பார்கள். ஹர்பஜன்சிங்கும் இதுபோல் தானோ?, தெண்டுல்கர், கும்ப்ளே போன்றோரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைக்கக்கூடும். இந்திய அணிக்கு வந்து குறுகிய காலமே ஆன ஹர்திக் பாண்டியா அணியின் கலாசாரம் குறித்து எப்படி பேச முடியும்.



    இரண்டு வீரர்களையும் இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான். இதுபோன்ற விஷயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படித்தான் கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும். இந்த தண்டனை எதிர்பார்த்ததுதான். இதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இந்திய அணியின் பஸ்சில் இவர்கள் இருவரும் பயணித்தால், எனது மனைவி அல்லது குழந்தை என்னுடன் வந்தால் நிச்சயம் இவர்களுடன் இணைந்து பயணிக்க மாட்டேன். பெண்களை ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்ப்பது சரியானது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் சிட்னி போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #HardikPandya
    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் நோட்டீஸ் அனுப்பினார். ஹர்திக் பாண்டியா உடனடியாக மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பினார். லோகேஷ் ராகுல் கடிதம் அனுப்பினார்.



    ஆனால் அவர்கள் விளக்கம் வினோத் ராய்-ஐ திருப்திப் படுத்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க பரிந்துரை செய்தார். அதேவேளையில் மற்றொரு நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி, ‘‘சிஇஓ விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே முடிவை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதே சிறந்ததாக இருக்கும்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் ‘‘இருவர் மீதான விசாரணை முடிவடையாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’  என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் நாளை சிட்னியில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவடையாததால் இருவரும் உடனடியாக இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தலா இரணடு போட்டியில் விளையாட தடைவிதிக்க வாய்ப்புள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிர்க்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதால் சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பாண்டியா இதற்காக மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்திருந்தார்.

    பாண்டியாவின் விளக்கம் தனக்கு திருப்திகரமான இல்லை என்று கூறிய நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ‘‘பெண்கள் குறித்து சர்ச்சையாக தெரிவித்த பாண்டியா, ராகுலுக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன்’’ என்றார். மேலும்,‘‘நிர்வாகக்குழுவின் மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி-யின் கருத்தை பொறுத்து இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை பிசிசிஐ-யின் சிஏஓ ஏற்றுக்கொண்டது. #BCCI #ViratKohli
    வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்கள் மனைவியர், தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது என்பது பிசிசிஐ நிலையாக உள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.



    அப்போது, மனைவியர் மற்றும் தோழிகள் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்பட உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் சப்போர்ட் சிஸ்டம் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்களால் ஒருபோதும் ஆட்டம் பாதிக்காது என்பதை வலியுறுத்தியிருந்தார்.

    உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள் தங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், தொடர் தொடங்கும் முதல் 10 நாட்கள் வீரர்கள் அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. அதன்பின் தொடர் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முறைகேடாக வயது சான்றிதழ் வழங்கி விளையாடுவது தெரியவந்தால் இரண்டாண்டு தடைவிதிக்கப்படும் என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    பிசிசிஐ-யால் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இளைஞர்கள் பெரும்பாலானோர் போலி வயதுச் சான்றிதழ் கொடுத்து அணியில் சேர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து ஏற்கனவே டிராவிட் கவலை தெரிவித்திருந்தார். மேலும் இப்படி சேரும் வீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



    இந்நிலையில் இதுபோன்று தவறுகள் செய்யும் இளைஞர்களுக்கு இரண்டாண்டு தடைவிதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் இதற்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×