search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் சஸ்பெண்ட்: சிட்னி போட்டியில் இருந்து நீக்கம்
    X

    ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் சஸ்பெண்ட்: சிட்னி போட்டியில் இருந்து நீக்கம்

    நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் சிட்னி போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #HardikPandya
    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் நோட்டீஸ் அனுப்பினார். ஹர்திக் பாண்டியா உடனடியாக மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பினார். லோகேஷ் ராகுல் கடிதம் அனுப்பினார்.



    ஆனால் அவர்கள் விளக்கம் வினோத் ராய்-ஐ திருப்திப் படுத்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க பரிந்துரை செய்தார். அதேவேளையில் மற்றொரு நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி, ‘‘சிஇஓ விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே முடிவை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதே சிறந்ததாக இருக்கும்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் ‘‘இருவர் மீதான விசாரணை முடிவடையாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’  என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் நாளை சிட்னியில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவடையாததால் இருவரும் உடனடியாக இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×