search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினோத் ராய், கங்குலி
    X
    வினோத் ராய், கங்குலி

    சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராவது சிறப்பான முன்னேற்றம்: சிஒஏ வினோத் ராய்

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் தலைவராக இருப்பது சிறப்பான முன்னேற்றம் என சிஒஏ வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஒருமனதாக கங்குலி போட்டியின்றி தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு கிரிக்கெட் நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய், கங்குலி தலைவராக பொறுப்பு ஏற்க இருப்பது சிறப்பான முன்னேற்றம் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகப்பெரிய முன்னேற்றம். முன்னாள் வீரர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை நடத்திய அனுபவம் உள்ள ஒருவர் பிசிசிஐ-யின் நிர்வாகத்திற்கு வருவது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

    கடந்த காலம் பற்றி எனக்குத் தெரியாது. நான் எதிர்காலத்தை பார்க்கிறேன். கடந்த காலத்தில் நான் எதையும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் முன்னாள் வீரர் மட்டுமல்ல. தலைசிறந்த கேப்டன். கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்’’ என்றார்.
    Next Story
    ×