என் மலர்
விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், இன்னாளில் மிகவும் பிரபலமான வர்ணனையாளராக இருக்கும் மைக்கேல் வாகன், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
வாகன், 'விராட் கோலி மிகச்சிறந்த கேரக்டர். ஒரு டெஸ்ட் போட்டியில் எப்படி யுக்தி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை அவர் 4வது போட்டி வெற்றியின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
விராட் கோலி களத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்று புகார் கூறுபவர்கள் உற்சாகத்தை வெறுப்பவர்களாக இருப்பார்கள். விராட் கோலி போன்றவர்கள் கிரிக்கெட்டுக்கு மிக மிக அவசியம். அவரைப் போன்ற ஆட்களால்தான் இந்த விளையாட்டை மேலும் மேலும் ஆர்வமுடையதாக மாற்ற முடியும்.
80 மற்றும் 90களில் ஆஸ்திரேலியாவின் ஷேர் வார்ன் அப்படிப்பட்ட ஒரு கேரக்டராக இருந்தார். இப்போது கோலி இருக்கிறார்' என்று உச்சபட்ச புகழாரத்தை சூட்டியுள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா) கால் இறுதியில் ஆலந்தை சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.
இதில் மெட்வதேவ் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 2019 அமெரிக்க ஓபனில் 2-வது இடத்தை பிடித்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளார்.
மெட்வதேவ் அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த அகுர் அலிஸ்மியை எதிர்கொள்கிறார். அவர் கார்லோஸ் அல்காரஸ் கார்பியாவுக்கு (ஸ்பெயின்) எதிரான கால் இறுதியில் 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது கார்பியா போட்டியில் இருந்து விலகியதால் அலிஸ்மி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) - ஹாரீஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜோகோவிச் (செர்பியா) - பெர்டினாட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) - 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.
இதில் ஷபலென்கா 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினாவை (உக் ரைன்) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.
அரைஇறுதி ஆட்டத்தில் ஷபலென்கா- லேலா பெர்னாண்டஸ் மோதுகிறார்கள். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து) -எம்மா (இங்கிலாந்து), பிளிஸ்கோவா (செக் குடியரசு)- ஷகாரி (கிரீஸ்) மோதுகிறார்கள்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மற்றொரு அற்புதமான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.
உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். இந்த பட்டத்தை உங்களுக்கு (இந்தியா) மட்டுமே தர முடியும்.
இவ்வாறு வார்னே கூறி உள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
3வது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வாகன், இந்திய அணியை 'யுஸ்லெஸ்' என்று சாடியிருந்தார். அப்படிப்பட்டவர் தற்போது இந்தியாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அவர், 'எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள். இந்தியா அப்படியான ஒரு அணி. எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அப்போது அதைச் செய்து காட்டியுள்ளது.
இந்தியா, மிக வலுவான அணியாக உள்ளது. விராட் கோலி, யுக்திகளை வகுப்பதில் திறமையுடன் செயல்பட்டார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டினார்' எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், ஜஸ்ப்ரீத் பும்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்த நிலையில், சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒல்லி போப்பின் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் கைப்பற்றும் 100-வது விக்கெட் ஆகும்.
மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வித போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். பும்ரா ஒரு பீஸ்ட்' என்று புகழ்ந்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், 'பும்ராவின் பந்துவீச்சு உண்மையிலே அபாரமானதுதான். டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சின் பெஸ்ட் இது' என்று பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி தொடர்களில் இடம் பெற்று இருந்த இந்த இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பேட்ஸ்மேன் சோகைப் மசூத் அணியில் தொடருகிறார்.
ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் 23 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அசம்கான் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீரர் மொயின்கானின் மகன் ஆவார். மாற்று வீரர்களாக உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி, பஹர் ஜமான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருமாறு:-
பாபர் அசாம் (கேப்டன்), ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோகைப் மசூத், அசம்கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷகீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து 20 ஓவர் போட்டியிலும் (வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை), ராவல்பிண்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியிலும் (அக்டோபர் 13, 14-ந் தேதி) விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டி தொடரிலும் இதே பாகிஸ்தான் அணி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






