search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேப்டன் விராட் கோலி"

    இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். #ViratKohli
    சவுத்தாம்ப்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

    இந்த போட்டியின் போது கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. மேலும், சர்வதேச அரங்கில் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையும் பெற்றார்.
     
    அதிவேகமாக 4000 ரன்களை எட்டிய கேப்டன்கள்: 

    விராட் கோலி (65 இன்னிங்ஸ்)
    பிரயன் லாரா (71)
    ரிக்கி பாண்டிங் (75)
    அயன் சாப்பல் (80)
    ஆலன் பார்டர் (83)

    இந்தத் தொடரில் விராட் கோலி 544 ரன்களை எடுத்துள்ளார். ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் இம்மைல்கல்லை எட்டிய முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமை பெற்றார். ஒரு தொடரில் அந்நிய மண்ணில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார் கோலி. 

    மேலும், இரண்டாவது இன்னிங்சில் 8வது முறையாக அரை சதம் அடித்துள்ளார் விராட் கோலி. இதன்மூலம் லட்சுமணன், சேவாக்க்குடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

    12 அரை சதத்துடன் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் முதலிடத்திலும், 10 அரை சதத்துடன் டிராவிட்டும் சச்சினும் இரண்டாவது இடத்திலும்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli
    ×