search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட்
    X
    ஜோ ரூட்

    தோல்விக்கு அதுதாங்க காரணமாயிடுச்சு....- புலம்பிய ஜோ ரூட்

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது.
    லண்டன்,

    இந்தியாவுக்கு எதிரான நான்காவது போட்டியின் தொடக்கத்தில் நன்றாகவே ஆடினோம் என்றும், இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் என்றும் தோல்வி குறித்து கருத்து கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.  

    உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவர் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அணியில் விக்கெட்டுகள் சரியும் போது, களத்தில் இறங்கி  பேட்டிங்கை தாங்கி பிடிப்பார்.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. போட்டியின் 5வது நாளான நேற்று உணவு இடைவேலைக்கு முந்தைய பகுதியில் இங்கிலாந்து ஓரளவு தாக்குப்பிடித்தது. அதன்பின்னர் விக்கெட்டுகளை மளமளவென இழந்து, இந்தியாவிடம் தோல்விகண்டது. 

    குறிப்பாக இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்த பின்னரும், பின்னால் வந்த எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. ஜோ ரூட் மட்டும் தட்டுத்தடுமாறி 78 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 

    அவர் களத்தில் இருந்தபோது பவுலிங் செய்ய வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். நல்ல ஃபார்மில் இருந்த ஒல்லி போப்பை 2 ரன்னுக்கும், ஜானி பேர்ஸ்டோவை 0 ரன்னுக்கும் ஆட்டமிழக்கச் செய்து இந்தியாவுக்குச் சாதகமாக சூழலை மாற்றினார். 

    இதுகுறித்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ கூறியவாது,

    'இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சு ஸ்பெல் (6-3-6-2) அதிரடியாக இருந்தது. இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அவரின் பவுலிங்கிற்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்ட தொடங்கத்தில் நன்றாகவே ஆடினோம். இறுதியில் வெற்றி வாய்ப்பு நழுவிவிட்டது'' என்று தெரிவித்தார்.
    Next Story
    ×