search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் பும்ரா
    X
    ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் பும்ரா

    பும்ரா ஒரு பீஸ்ட்- உச்சபட்ச புகழாரம் சூட்டிய சேவாக்

    24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
    லண்டன்:

    இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், ஜஸ்ப்ரீத் பும்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்த நிலையில், சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.   

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒல்லி போப்பின் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் கைப்பற்றும் 100-வது விக்கெட் ஆகும்.

    மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

    இதுகுறித்து, முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வித போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். பும்ரா ஒரு பீஸ்ட்' என்று புகழ்ந்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், 'பும்ராவின் பந்துவீச்சு உண்மையிலே அபாரமானதுதான். டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சின் பெஸ்ட் இது' என்று பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
    Next Story
    ×