என் மலர்
விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி ஆகியோர் 3-வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா, ஸ்பெயினைச் சேர்ந்த கார்பைன் முகுருசாவுடன் மோதினார். இதில் கிரெஜ்சிகோவா அபாரமாக விளையாடி 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், தடுப்பூசிகள் ஒரு கோடிக்கு மேல் போடப்பட்டு சாதனை படைத்துள்ளதற்கும் பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டும் மிகச்சிறந்த நாள். எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவல்:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஓப்பனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் 368 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது.
ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ரன்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி தொடங்கி நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும்.
இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. வருகிற 10-ந் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று முடிவடைகிறது.
இந்த போட்டி முடிந்த பிறகோ அல்லது அதற்கு முன்போ தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்யலாம். ஒருவேளை இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படாவிட்டால் நாளை அறிவிக்கப்படும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன.
நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் மோதுகின்றன.

ஓவல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஓவல்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் இந்தியா 466 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 368 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
368 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன் எடுத்து இருந்தது.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 291 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.
இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி எஞ்சிய ரன்களை எடுத்து வெற்றி பெற முயற்சிக்கும். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும். 5 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.
ஓவல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3-வது நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆண்டர்சன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் கேட்ச் பிடித்தார். நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இங்கிலாந்து டி.ஆர்.எஸ்.சுக்கு சென்றது. டெலிவிஷன் மூலம் ராகுல் பேட்டில் பந்து பட்டு கேட்ச் ஆகியிருந்தது தெரிய வந்தது. டி.ஆர்.எஸ். மூலம் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
ஆனால் ராகுல் மைதானத்தை விட்டு உடனே வெளியே செல்லாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுலின் ஒழுக்க நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி, உலக தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதினார்.
முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வென்றனர். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஆரம்பத்தில் ஆஷ்லே பார்டி ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால் ஆஷ்லே பார்டி அடுத்தடுத்து செய்த தவறுகளால் அந்த செட்டை 6-7 என கோட்டை விட்டார்.
இறுதியில், ஷெல்பி ரோஜர்ஸ் 6-2, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். நம்பர் ஒன் வீராங்கனை ஒருவரை 28 வயதான ஷெல்பி ரோஜர்ஸ் வீழ்த்தியதும் இதுவே முதல் தடவையாகும்.
வங்காளதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
டாக்கா:
நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வங்காளதேசம் 19.4 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், மெக்கன்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருது அஜாஸ் படேலுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் ஜேனிக் சின்னர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள்.
தொடக்கம் முதலே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என மெட்வதேவ் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-4, மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், மெட்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
ஓவல்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது.
அதன்பின், 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் விளாசினர். கேப்டன் விராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 14 ரன்களிலும், ரகானே 4 ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின், இறங்கிய ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து அரை சதம் கடந்தனர். ஷர்துல் தாகூர் 60 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
பும்ரா (24), உமேஷ் யாதவ் (25) தங்கள் பங்களிப்பை வழங்க, இந்திய அணி 2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்தைவிட 367 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ராபின்சன், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது நிதானமாக ஆடினர்.
நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 31 ரன்னும், ஹமீது 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஓவல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு பிறகு ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஓவல்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் விளாசினர். கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. ஜடேஜா 17 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே ரன் எதுவும் எடுக்காமலும் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட ஷர்துல் தாகூர் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ரிஷப் பண்ட் 50 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பும்ரா (24), உமேஷ் யாதவ் (25) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்க, இந்திய அணி 2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்தைவிட 367 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி 2வது இன்னிங்சை விளையாடுகிறது. இன்றைய ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் இருந்தால், போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.
இன்று மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.
இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆட்டத்தின்போது கேப்டன் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஓவல்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி 83 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்தார். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் செஞ்சுரி இதுவாகும். தொடர்ந்து ஆடிய அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய புஜாரா 61 ரன்களில் அவுட் ஆனார். இதனால் 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. நிதானமாக ஆடிய ஜடேஜா 14 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களிலும் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 16 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தைவிட இந்தியா 230 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.