என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து  ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் எல்லா வகையிலும் மனரீதியாக தயாராக இருந்தேன்.

    ஓவல்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் செஞ்சுரி இதுவாகும். ரோகித் சர்மா 127 ரன்னும், புஜாரா 61 ரன்னும் , ராகுல் 46 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.

    ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட் இருக்கிறது.

    சதம் அடித்த ரோகித் சர்மா நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்நிலை வரிசையில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக ஆடினால் தான் அணி நல்ல நிலையை அடைய முடியும். நெருக்கடியான இந்த நேரத்தில் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடக்க வரிசையில் எனது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன்.

    விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் எல்லா வகையிலும் மனரீதியாக தயாராக இருந்தேன்.

    நாங்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். ஆனாலும் இன்னும் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது. இன்றைய ஒருமணி நேர ஆட்டம் மிகவும் முக்கியமானது. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்தால் எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.

    இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  19 பதக்கங்களை வென்றுள்ளது.
    பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  18 பதக்கங்களை வென்றுள்ளது.
    டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

    இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கோலாகலமான நிறைவு விழா அரங்கேறுகிறது. இந்த விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தைப் பெற்றுள்ளார்.

    நிறைவு விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறினர்.
    நியூயார்க்:

    பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 73-ம் நிலை வீராங்கனையான 18 வயது லேலா பெர்னாண்டசை (கனடா) எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய ஒசாகா 2-வது செட்டை டைபிரேக்கரில் பறிகொடுத்தார். இதனால் அடுத்த செட்டில் உத்வேகத்துடன் செயல்பட்ட லேலா பெர்னாண்டஸ் அதனை கைப்பற்றியதுடன் பட்டத்தை தக்க வைக்கும் ஒசாகாவின் ஆசைக்கும் ஆப்பு வைத்தார்.

    சுமார் 2 மணி 4 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் லேலா பெர்னாண்டஸ் 5-7, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    தோல்விக்கு பிறகு நவோமி ஒசாகா கண்ணீர் மல்க கூறுகையில், இந்த தோல்வி குறித்து வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக உணருகிறேன் என்றார்.

    நவோமி ஒசாகா மன அழுத்தம் காரணமாக கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இருந்து விலகினார். அடுத்து நடந்த விம்பிள்டன் போட்டியில் இருந்தும் முழுமையாக ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளது.
    புதுடெல்லி:

    டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அவரை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாரியப்பனுக்கு இமாசல பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பி அணிவித்து மகிழ்ந்தார். மேலும், சால்வையும், பூங்கொத்தும் கொடுத்தார்.

    அதன்பின் அவர் பேசுகையில், சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதற்காக மாரியப்பனை வாழ்த்துகிறேன். தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர். அவரது சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது என தெரிவித்தார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், இவான்ஸ் ஆகியோர் ஏற்கனவே 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், ஜப்பானைச் சேர்ந்த நிஷிகோரியும் மோதினார்கள்.

    முதல் செட்டை 7-6 என நிஷிகோரி கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3, மூன்றாவது செட்டை 6-3 , நான்காவது செட்டை 6-2 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-7, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
    இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் சதமடித்து அசத்தினார்.
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது.
     
    அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்னில் அவுட்டானார். ஹென்ரிக்ஸ் 51 ரன்னும், கிளாசென் 43 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் சமீரா, கருணரத்னே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்,

    5 விக்கெட் வீழ்த்திய ஷம்சி

    மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவரில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 36.4 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சரித் அசலங்கா ஓரளவு தாக்குப் பிடித்து 77 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 36 ரன்னும், டாசன் சனகா 30 ரன்னும் எடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-1 என சமனிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஜேன்மன் மலானுக்கு வழங்கப்பட்டது. 

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
    ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
    ஓவல்:

    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் அடித்தன. இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய புஜாரா, 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 237/3.

    அதன்பின்னர் விராட் கோலி, ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாட, 92 ஓவர் முடிந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாக வானிலை சீரடையாததால், 3வது நாள் ஆட்டம் அத்துடன் நிறைவு செய்யப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, 205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.
    ஓவல்:

    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் அடித்தன. 

    இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ரோகித்-புஜாரா

    இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.  205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். அப்போது ரசிகர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். மறுமுனையில் புஜாரா அரை சதத்தை நெருங்கினார். 
    பாராலிம்பிக் போட்டியில் இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
    சென்னை:

    டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்திய அணி டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 17 அக உயர்ந்துள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பாராலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள இறகுப்பந்து போட்டியில் நமது வீரர்கள் பிரமோத் பகத்தும், மனோஜ் சர்க்காரும் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு எனது பாராட்டுகளையும், அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட இருக்கும் பிரமோத் பகத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    ×