என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
    டோக்கியோ:

    டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று காலையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், தற்போது மேலும் இரண்டு பதக்கங்களை வசமாக்கி உள்ளனர்.

    பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இறுதிப்போட்டியில் இவர் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார். 

    இதன்மூலம் இந்திய அணி டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
    பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர்.

    10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார்.

    பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.



    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெட்வதேவ் ஆகியோர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் மூன்றாம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவும் மோதினார்கள்.

    ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை கார்பியா 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை சிட்சிபாஸ் 6-4 என வென்றார்.

    மூன்றாவது செட்டை கார்பியா 7-6 என போராடி கைப்பற்றினார். நான்காவது செட்டில் வீறு கொண்டெழுந்த சிட்சிபாஸ் 6-0 என முழுமையாக வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டை கார்பியா 7-6 என்ற கணக்கில் மீண்டும் போராடி கைப்பற்றினார்.  

    இறுதியில், கார்பியா 6-3, 4-6, 7-6, 0-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.  இதன்மூலம் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
    ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்  தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். அதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

    இதற்கிடையே, 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதினார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், மைதானத்திற்குள் திடீரென நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஜார்வோவை லண்டன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    டாக்கா:

    நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது நயீம் 39 ரன்னும், லித்தன் தாஸ் 33 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மக்மதுல்லா பொறுப்புடன் ஆடி 37 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

    நியூசிலாந்து சார்பில் ராச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும், அஜாஸ் படேல், மெக்கன்சி, பென்னட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

     ஆட்டநாஅரை சதம் அடித்த டாம் லாதம்

    இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். வில் யங் 22 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. டாம் லாதம் களத்தில் நின்றும் 15 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டாம் லாதம் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி திரில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 65 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். அவரது போராட்டம் வீணானது.

    இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக மக்மதுல்லா தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர்.
    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாக்குர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர்.
    இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4 விக்கெட், ராபின்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. மலான் 31 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 37 ரன்னும், மொயீன் அலி 35 ரன்னும் எடுத்தனர். 

    அரை சதமடித்த கிறிஸ் வோக்ஸ்

    ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 81 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தபோதும், மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய ஒல்லி போப் 81 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.
    லண்டன்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோலி 50 ரன் எடுத்தார். 

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மலான் 26 ரன்களுடனும், ஓவர்டன் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஷர்துல் தாகூர் பந்தில் கிளீன் போல்டு ஆன ஒல்லி போப்.

    இன்று 2ம் நாள் ஆட்டத்தின்போது ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நிதானமாக ஆடிய பேர்ஸ்டோ 37 ரன்களும், மொயீன் அலி 35 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தபோதும், மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய ஒல்லி போப் 81 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கிறிஸ் வோக்ஸ் அரை சதம் அடித்தார். ஆனால் அந்த  ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 290 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
    டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம், துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றனர். 

    இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. வில்வித்தை (ரிகர்வ்) போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். அரையிறுதியில் தோல்வி அடைந்த ஹர்விந்தர் சிங், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், தென்கொரிய வீரர் கிம் மின் சூவை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில், பாராலிம்பிக்கில் இந்திய அணி அதிக பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணி போடும் ஜெர்ஸி துணியையே அணிந்து கொண்டு மைதானத்துக்குள் ஒவ்வொரு முறையும் ஓடி வருகிறார்.
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் யார் வெல்வார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தால், ஒவ்வொரு போட்டியின் போதும் ஜார்வோ என்னும் நபர் வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    டேனியல் ஜார்விஸ் என்னும் இங்கிலாந்து நாட்டுக்காரர், இப்படி ஆட்டம் நடக்கும்போதே மைதானத்துக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதும் மைதானத்துக்குள் திடீரென்று நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தினார் ஜார்விஸ் என்னும் ஜார்வோ.

    தற்போது மீண்டும் அவர் இன்றைய போட்டியின் போது மைதானத்துக்குள் நுழைந்து பந்துவீச முயன்றுள்ளார். தன்னை ஒரு இந்திய வீரர் போலவே எண்ணிக் கொள்ளும் ஜார்வோ, இந்திய அணி போடும் ஜெர்ஸி துணியையே அணிந்து கொண்டு மைதானத்துக்குள் ஒவ்வொரு முறையும் ஓடி வருகிறார்.

    இன்றும் இந்திய ஜெர்ஸியில் தான் என்ட்ரி கொடுத்தார் ஜார்விஸ். அவர் இப்படி சர்வதேச போட்டி நடக்கும்போது மைதானத்துக்குள் வரம்பை மீறி வருவது கண்டனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஜார்வோ வந்தாலே சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது.
    நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பாக்கி போட்டிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளன. அதில் டெல்லி அணி சார்பில் பண்ட் கேப்டனாக தொடர்வாரா மாட்டாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட்டின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பதே. அவர் 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில் இதுவரை ஒரேயொரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில், விக்கெட் கீப்பர் சஹா விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இப்படியான நேரத்தில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பாக்கி போட்டிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளன. அதில் டெல்லி அணி சார்பில் பண்ட் கேப்டனாக தொடர்வாரா மாட்டாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    அதே நேரத்தில் நடப்பாண்டு ஐபிஎல் தரவரிசையில் டெல்லி அணி முதலிடத்தில் இருப்பதால், அவர் கேப்டனாக தொடர்வதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    துப்பாக்கிச்சுடுதலில் ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில் அவனி லெகாரா வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2வது பதக்கம் வென்றார்.

    துப்பாக்கிச்சுடுதலில் ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில் அவனி லெகாரா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்.

    50 மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார்.

    நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.
    பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்றுள்ளார்.

    வெள்ளி வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்.

    பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

    பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார்.

    நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.


    ×