என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் விராட் கோலி, ஷர்துல் தாகூர் ஆகியோர் அரை சதமடித்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாகூர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4 விக்கெட், ராபின்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோரை பும்ரா விரைவில் வெளியேற்றினார்.
அடுத்து டேவிட் மலானுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை ஆடியது. ஜோ ரூட் 21 ரன் எடுத்தபோது உமேஷ் யாதவிடம் ஸ்டம்பை பறி கொடுத்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. மலான்26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் பும்ரா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அஷ்வின் பெயர் விடுபட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறி உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தின் பிட்ச், 4வது மற்றும் 5வது நாளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அஷ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது மிகப்பெரும் தவறு, இது பைத்தியக்காரத்தனமான முடிவு என்று காட்டமாக கூறி உள்ளார் வாகன்.
இதேபோல் அஸ்வினை இந்த போட்டியில் சேர்க்காதது வியப்பை அளித்ததாக முன்னாள் வீரர்கள் லிசா ஸ்தலேகர், டாம் மூடி ஆகியோர் கூறி உள்ளனர்.
இந்த தொடரில் நான்காவது முறையாக ஆடும் லெவனில் இருந்து அஷ்வின் நீக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக புகழ்பெற்ற வர்ணனையாளர்கள் ஆலன் வில்கின்ஸ் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் கூறி உள்ளனர்.
ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அஷ்வின் பெயர் விடுபட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறி உள்ளார். அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோரை சேர்க்காததன் மூலம் தோல்வியை விரும்புவது போல் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ரசிகர்களும் தங்கள் கருத்தையும் ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டுள்ளனர்.
நெருக்கடியான நேரத்தில் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 11 ரன்கள், கே.எல்.ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.

ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த நெருக்கடியான நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அஷ்வினுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 11 ரன்கள், கே.எல்.ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர். இந்திய அணி, உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி நீக்கப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 60 ரன்னில் சுருட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது வங்காளதேசம்.
நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 16.5 ஓவரே தாக்குப்பிடிக்க முடிந்தது. லாதம், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைக் கடந்தனர்.
வங்காளதேசம் அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். நசும் அகமது, ஷாகிப் அல் ஹசன், சாய்புதின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 61 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் சாதனைப்படைத்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான டேனியல் மெட்வதேவ் (ரஷியா)- டொமினிக் கோபர் (ஜெர்மனி) மோதினார்கள்.
இதில் மெட்வதேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-7 (4-7), 6-0 என்ற செட் கணக்கில் பிரான்சை சேர்ந்த அட்ரியனை தோற்கடித்தார்.
இதேபோல 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), சுவார்ட்மேன் (அர்ஜெண்டினா), பாடிஸ் டுடா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலப் (பெல்ஜியம்) 2-வது சுற்றில் சுலோவாக்கியாவை சேர்ந்த கிறிஸ்டியானா குச்கோவாவை எதிர்கொண் டார். இதில் ஹாலப் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 18-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெனாரஸ்) 6-3, 7-6, (7-1) என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பலோடியை தோற்கடித்தார்.
3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்), 5-ம் நிலை வீராங்கனையான சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
அதிக சர்வதேச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலகக்கோப்பையில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2022-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடும். மற்ற 31 நாடுகளும் தகுதி சுற்று மூலம் தேர்வுபெறும். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஐரோப்பாவில் நடைபெற்று வந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்- அயர்லாந்து அணிகள் மோதின. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அவர் 89 மற்றும் 96-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த 2 கோல்கள் மூலம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். 36 வயதான அவர் 180 ஆட்டங்களில் விளையாடி 111 கோல்கள் அடித்துள்ளார்.
ஈரானை சேர்ந்த அலிடாய் 149 ஆட்டங்களில் விளையாடி 109 கோல்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அவரை ஏற்கனவே சமன் செய்த ரொனால்டோ தற்போது அவரை முந்தி அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்தார். ரொனால்டோ சமீபத்தில்தான் யுவென்டஸ் கிளப்பிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மீண்டும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவை சேர்ந்த முக்தர் தகாரி 89 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும், புஸ்காஸ் (ஹங்கேரி) 84 கோல்கள் அடித்து 4-வது இடத்திலும், காட்பிரே (ஜாம்பியா) 79 கோல் அடித்து 5-வது இடத்திலும் உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 23-ந் தேதி மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும்.
இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 6 அல்லது 7-ந் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 23-ந் தேதி மோதுகின்றன.
நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று மூலம் தகுதி பெறும் அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் மோதுகின்றன.
இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும்.
இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. வருகிற 10-ந் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 23-ந் தேதி மோதுகின்றன.
நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று மூலம் தகுதி பெறும் அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் மோதுகின்றன.
இந்த வருடத்தில் இதுவரை ஆறு சதங்கள் விளாசியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் மூன்று சதங்கள் விளாசியுள்ளார்.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், மார்னஸ் லாபஸ்சேன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், விராட் கோலி 6-வத இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம், டேவிட் வார்னர், டி காக், ஹென்றி நிக்கோலஸ் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப்பின் பின் விராட் கோலி முதல் ஐந்து இடங்களுக்கு கீழ் சரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்தீப் நார்வால் ரூ.1.65 கோடிக்கு உ.பி.யோத்தா அணிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 3 நாட்கள் நடந்தது. இதில் மொத்தம் 190 வீரர்கள் ரூ.48.22 கோடிக்கு அணிகளால் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக பர்தீப் நார்வால் ரூ.1.65 கோடிக்கு உ.பி.யோத்தா அணிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான பொழுதுபோக்கு அம்சங்களை தடை செய்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2001ல் இழந்த ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி உள்ளனர். தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இன்னும் பலர் வெளியேற காத்திருக்கின்றனர். தலிபான்களின் கையில் நாடு சென்றதால் கடுமையான அடக்குமுறைகளை அரங்கேற்றலாம் என மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
ஆனால் உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்ட விரும்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழலாம் என்றும் தலிபான் அமைப்பு கூறி உள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு தலிபான் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் தலிபான் ஆட்சியில் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியாவுக்கு விளையாட அனுப்ப அனுமதி கிடைத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஹமித் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான பொழுதுபோக்கு அம்சங்களை தடை செய்தனர். விளையாட்டு மைதானங்களை, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அரங்கமாக பயன்படுத்தினர். தற்போது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அந்த போட்டி வரும் நவம்பர் 27ம் தேதி தொடங்கி டிசம்பர் 1ம் தேதி வரை ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா செல்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.






