என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்கு பதிலாக இரண்டு புதிய வீரர்களை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 19-ம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளன. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாலும், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிற்கு இடைவெளி விட்டுள்ளதாலும் இந்த ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எவின் லீவிஸ், ஒஷானே தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக, மும்பை அணியில் லீவிஸ் விளையாடியுள்ளார். தாமஸ் ராஜஸ்தான் அணியில் விளையாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் அவரை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்த வகையில் எல்லா பெருமையும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும். இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அடுத்து வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அப்போது தான் தொடரை வெல்ல முடியும்.

அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அஷ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். போட்டியின் போது யார் பந்துவீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை, அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டியும், ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வெனரேவா மோதினர்.
முதல் செட்டை ஆஷ்லே பார்டி 6-1 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் வெரா ஸ்வெனரேவா சுதாரித்துக் கொண்டு ஆடினார். ஆனாலும், 2-வது செட்டை 7-6 என ஆஷ்லே பார்டி வென்றார்.
இறுதியில், ஆஷ்லே பார்டி 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஜப்பானின் நவாமி ஒசாகா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, எஸ்தோனியாவின் கயா கனேபி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரில் யார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-வது சீசன் ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் விளையாடி முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்பட்டது. தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ம்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். இதனால், ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷாப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கபபட்டார். டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுடன் ரிஷாப் பண்ட் தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக விளையாடினார்.
இதையடுத்து, காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட தயாராகிவிட்டார். இதனால் டெல்லி அணியை யார் வழி நடத்தப்போவது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ரிஷாப் பண்ட்தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், கண்டிப்பாக ரிஷாப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பதால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. நாளை மறுதினம் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ஐந்து இன்னிங்சில் பேட்டிங் செய்து ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இந்திய அணி முன்னிலை பெறும் அளவிற்கு மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ. வி. ராமன் கூறியதாவது:-
விராட் கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், அவருடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம். விராட் கோலி மீது நிறைய அழுத்தம் உள்ளது. அதனாலேயே அனைவரின் கவனம் அவர் மேல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பாப்புகளும் அதிகமாகவே உள்ளது.
3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முடன் விளையாடினார். கண்டிப்பாக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டபிள்யூ.வி. ராமன் தெரிவித்தார்.
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் நிலையில், சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதி ஆட்டம் டெல்லியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் நடைபெறவில்லை. இந்நிலையில், ரஞ்சி கோப்பை உள்ளிட்ட அனைத்து வகையான முன்னணி கிரிக்கெட் தொடர்களையும் நடத்தப்போவதாக பி.சி.சி.ஐ. தகவல் வெளியிட்டது.
இதனடிப்படையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 27-ம் முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை டிசம்பர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து, ரஞ்சி கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என பி.சி.சி.ஐ. அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மேலும், சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டெல்லியிலும், ரஞ்சி கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவிலும் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் ரஞ்சி போட்டி மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறும். பிப்ரவரி 20-ந்தேதி முதல் நாக் அவுட் ஆட்டங்கள் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார்.
இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள். மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது” எனப்பதிவிட்டுள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பாராலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
பாராலிம்பிக் உயரம் தாண்டுல் (டி42) போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று உயரம் தாண்டுதல் (டி42) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதற்கு முன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியர்கள் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரியப்பன் ஏற்கனவே பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வீரர் சாம் கிரேவ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சமமான உயரம் தாண்டியதால் மேலும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் அமெரிக்க வீரர் 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.
தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த டேல் ஸ்டெயின் அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்றால், ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின்தான். தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நடுங்க வைக்கக்கூடியவர்.
பேட்ஸ்மேன் கால் அருகில் பந்தை பிட்ச் செய்து அவுட் ஸ்விங் செய்வதில் வல்லவர். அதுவும் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்.
38 வயதான ஸ்டெயின், இன்று அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்துள்ளார்.

125 ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், டி20-யில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
அவர் மொத்தம் 216.8 புள்ளிகள் குவித்து உள்ளார். அவருடன் இறுதி போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்து உள்ளார். தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்தில் இருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
அவர் மொத்தம் 216.8 புள்ளிகள் குவித்து உள்ளார். அவருடன் இறுதி போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்து உள்ளார். தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்தில் இருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார்.
முதல் செட்டை முர்ரே 6-2 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-6 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட முர்ரே மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் நான்காவது மற்று,ம் ஐந்தாவது செட்டை 6-3, 6-4 என வென்றார்.
இறுதியில், சிட்சிபாஸ் 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார். 4.30 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம் சிட்சிபாஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் காயத்தால் இந்த முறை பங்கேற்கவில்லை.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் இஸ்னர், சக வீரரான பிரண்டன் நகாஷிமாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை நகஷிமா 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக ஆடிய நகாஷிமா 7-6 என வென்றார். மூன்றாவது செட்டை 6-3 என வென்றார்.
இறுதியில், நகாஷிமா 7-6, 7-6, 6-3 என செட் கணக்கில் வென்று இஸ்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






