என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர் சிங்ராஜ் அதானா
    X
    இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

    டோக்கியோ பாராலிம்பிக்- இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலம்

    டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    அவர் மொத்தம் 216.8 புள்ளிகள் குவித்து உள்ளார்.  அவருடன் இறுதி போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்து உள்ளார்.  தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்தில் இருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளது.
    Next Story
    ×