என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
டோக்கியோ:
டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சுமித் அன்டில் கலந்து கொண்டார்.
அவர் இன்றைய போட்டியில் மிக அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரம் இது என்பதால், சுமித் அன்டில் உலக சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்தியரான சந்தீப் சவுத்ரி, 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காம் இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் டுலான் கோடிதுவாக்கா வெண்கலம் வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் ‘நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுகிறேன். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2015-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியால் இடம் பிடிக்க முடியவில்லை. இவர் வங்காளதேசம் அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல். 2021 சீசன் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 தொடரில் ஆறு ஆட்டங்களில் விளையாடி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடந்த 2018-ல் ஆர்.சி.பி. அணியில் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆர்.சி.பி. அணியில் சுந்தருக்கு பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆர்.சி.பி. மேலும் ஐந்து வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி
வினோத்குமாரின் வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்து இருந்தது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆடவர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து, அவரது வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் பங்கேற்ற பெண்களில் 10 பேர் 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.
துபாய்:
ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 8 தங்கப்பதக்கம் பெற்றது. 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது. பெண்களில் 10 பேர் பங்கேற்றதில் 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இலங்கை வீரர் ஹெராத் தங்கப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது வெள்ளிப்பதக்கம் இதுவாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.
பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
டோக்கியோ:
டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.
பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.
பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிசில் பவினா பென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் புதிய சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் ஜோகோவிச் தயாராகி வருகிறார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தயாராகியுள்ளார்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த ஆண்டில் ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வாகை சூடிய நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இங்கு அவர் பட்டம் வென்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார்.
அத்துடன், 1969-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை. அந்த அரிய சாதனையை படைக்கும் வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு உருவாகியுள்ளது. முதல் சுற்றில் அவர் தகுதி நிலை வீரர் டென்மார்க்கின் ஹோல்ஜர் நோட்ஸ்கோ ருனேவை எதிர்கொள்கிறார்.

ஒலிம்பிக் சாம்பியனும், சமீபத்தில் சின்சினாட்டி ஓபனை வென்றவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 2-ம் நிலை வீரர் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் ஜோகோவிச்சுக்கு கடும் சோதனையாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), அரினா சபலென்கா ( பெலாரஸ்), ஸ்வியாடெக் (போலந்து), ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), சிமோனா ஹாலெப் (ருமேனியா) , பிளிஸ்கோவா (செக் குடியரசு) உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.422 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.18½ கோடியும், 2-வது இடம் பிடிப்போருக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூ.4¾ கோடி கிடைக்கும்.
முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட் எச்.டி. 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அயர்லாந்து வீரர் ஷேன் கேட்காடே 3 விக்கெட் வீழ்த்தினார்.
டப்ளின்:
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 64 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்டன் ஷம்பா, ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. ஷம்பா 46 ரன்னுடனும், பர்ல் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்ட்ரிங் 37 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கெவின் ஓ பிரையன் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஜார்ஜ் டாக்ரெல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், அயர்லாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி தொடரில் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது கெவின் ஓ பிரையனுக்கு அளிக்கப்பட்டது..
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:
ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோன்னி பெர்ஸ்டோ, (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரெக் ஒவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.






