என் மலர்
விளையாட்டு
அமெரிக்க ஓபனை வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கனை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோகோவிச் படைப்பார்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 12-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த போட்டியில் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டென்னிசின் மும்மூர்த்திகளான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) மற்றும் 34 வயதான ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளனர். இதில் ஜோகோவிச் 21-வது கிராண்ட் ஸ்லாமை கைப்பற்றி அதிக பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் முன்னணி வீரர்களான நடால், பெடரர், நடப்பு சாம்பியன் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் ஆடவில்லை.
ஜோகோவிச் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஆகிய கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது அமெரிக்க ஓபனிலும் வெற்றி பெற்றால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாமையும் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
பெடரர், நடால் போன்ற முன்னணி வீரர்கள் சாதிக்காததை ஜோகோவிச் சாதிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறை (2011, 2015, 2018) வென்றுள்ளார். தற்போது 4-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
ஜோகோவிச்சுக்கு மெட்வதேவ் (ரஷியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) போன்ற வீரர்கள் சவால் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா, வீனஸ் ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உலகளவில் 2-வது இடத்தில் உள்ளார்.
முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது இடத்தில் உள்ள சபலென்கா (ரஷியா), ஒசாகா (ஜப்பான்), பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோர் இடையே பட்டம் பெற கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
டோக்கியோ:
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.

இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.
34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 11 முறை தொடர்ச்சியாக ஜாங் மியாவிடம் தோல்வி கண்டு இருந்த பவினாபென் பட்டேல் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றியை ருசித்தார்.

இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம்
ஜப்பானில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா லாங் 200மீ தனிநபர் மிட்லே பிரிவில் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
ஜப்பானில் பாராலிம்பிக் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மிட்லே எஸ்.எம்.8 நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். இத்துடன் பாராலிம்பிக்கில் 25 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இதில் 200மீ தனிநபர் மிட்லே எஸ்.எம்.8 பிரிவில் 4-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். ரியோ பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று 23 பதக்கங்கள் வென்றிருந்தார். தற்போது இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார். இதன்மூலம் பதக்க எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 100மீ பேக்ஸ்ட்ரோக் எஸ்8-ல் வெண்கல பதக்கம் வென்றார்.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஏழு பாராலிம்பிக்கில் பங்கேற்று 55 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் அந்த்ரே ரஸல் 6 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் அரைசதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஜமைக்கா அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. அந்த்ரே ரஸல் 6 சிக்சர், 3 பவுண்டரியுடன் 14 பந்தில் அரைசதம் விளாசினார். தொடக்க வீரர் சாத்விக் வால்டன் 47 ரன்னும், கென்னர் லீவிஸ் 48 ரன்னும், ஹைதர் அலி 45 ரன்களும் விளாசினர்.
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா கிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டிம் டேவிட் 28 பந்தில் 56 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.3 ஓவரில் 135 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 120 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்வளவு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இதுவரை எந்த அணியும் வென்றதில்லை. இதன்மூலம் கரீபியன் பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை ஜமைக்கா அணி பெற்றுள்ளது.
லீட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் படுமோசமாக தோல்வியடைந்த நிலையில், டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதற்கு 2-வது இன்னிங்சில் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியா முன்னிலை பெற்றது முக்கியக் காரணம்.
இன்றுடன் முடிவடைந்த லீட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது முக்கிய காரணம்.
டெஸ்ட் தொடர் தொடங்கியதில் இருந்தே அஷ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ரிஷாப் பண்ட் படுமோசமாக விளையாடி வருகிறார். அவர் ஐந்து இன்னிங்சில் 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 17.40. அதிகபட்சம் 37 ரன்கள் ஆகும்.

ஜடேஜா மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. ரஹானே ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் டுவிட்டர்வாசிகள் அணித்தேர்வை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டுவிட்டரில் ரிஷாப் பண்ட்-க்குப் பதிலாக சகாவை அணியில் சேர்க்க வேண்டும். ரஹானாவை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவ் அல்லது விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கவும். அஷ்வினை அணியில் சேர்க்க வேண்டும். பண்ட்-க்கு கொடுக்கும் வாய்ப்பு சகாவுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என கடுகடுத்து வருகின்றனர்.
முத்தையா முரளீதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் உள்ள நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 400 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய 4-வது ஆட்டத்திலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 630 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்று 2-வது இன்னிங்சில் ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை பதிவு செய்துள்ளா்.
94 டெஸ்ட் போட்டியில் 179 இன்னிங்சில் 3408.3 ஓவர்கள் வீசி 9,610 ரன்கள் விட்டுக்கொடுத்து இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

இதற்கு முன் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன்பின் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை தாண்டிய ஒரே பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் வாகன் தலைமையில் இங்கிலாந்து 51 டெஸ்ட் போட்டிகளில் 26 வெற்றிகள் பெற்றிருந்த நிலையில், தற்போது ஜோ ரூட் தலைமையில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் உள்ளார். ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்தாலும் இங்கிலாந்து அணி விமர்சனத்தை சந்தித்த வண்ணமே உள்ளது. இதற்கு ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சனை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்புவதே காரணம். என்றாலும் போட்டிகளில் விடாப்பிடியாக விளையாடி வெற்றிபெற்று வருகிறது இங்கிலாந்து அணி.
இன்றுடன் முடிவடைந்த லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்த வெற்றி இங்கிலாந்து கேப்டனாக ஜோ ரூட்டுக்கு 27-வது வெற்றியாகும்.

இதற்கு முன் மைக்கேல் வாகன் தலைமையில் இங்கிலாந்து அணி 51 டெஸ்டில் 26 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆண்ட்ரூ ஸ்டாரஸ் தலைமையில் 50 போட்டிகளில் 24 வெற்றிகளும், அலைஸ்டர் குக் தலைமையில் 59 டெஸ்டில் 24 வெற்றிகளும், பீட்டர் மே தலைமையில் 41 டெஸ்டில் 20 வெற்றியும் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்சில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 64 ரன்னுக்குள் கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி டாஸ் ஜெயிக்கவில்லை. ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
3-வது டெஸ்டில் விராட் கோலி டாஸ் ஜெயிக்கவா போகிறார்? என ரசிகர்கள் நினைக்க, ஆனால் டாஸ் ஜெயித்துவிட்டார். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
புதுப்பந்தில் ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 21 ரன்னுக்குள் கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி ஆகியோரை இழந்தது. அதன்பின் ஆலி ராபின்சன், சாம் கர்ரன், ஓவார்டன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 78 ரன்னில் சுருண்டது.
21 ரன்னில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா 78 ரன்னுக்குள் ஆல்-அவுட் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 57 ரன்னுக்குள் இழந்தது.
2-வது இன்னிங்சில் புஜாரா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 215 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 278 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 63 ரன்னுக்குள் இழந்தது.

இரண்டு இன்னிங்சிலும் கடைசி 8 விக்கெட்டுகளை 70 ரன்னுக்குள் இழந்து பரிதாபத்திற்கு உள்ளானது. இப்படி இழப்பது இந்திய அணிக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன் 1952-ல் மான்செஸ்டரிலும் இதுபோன்று பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
மான்செஸ்டரில் 5 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா முதல் இன்னிங்சில் 58 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் 55 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 82 ரன்னில் சுருண்டு ஆல்-அவுட் ஆனது.
அணியில் எப்போதும் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும், அப்போது தான் கீழே வருபவர்கள் நன்றாக ஆட முடியும் என விராட் கோலி கூறினார்.
லீட்ஸ்:
இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்வி பற்றி கேப்டன் விராட் கோலி மனமுடைந்து பேசியுள்ளார். போட்டி முடிந்தவுடன் கேப்டன் கோலி கூறியதாவது:-
நாங்கள் முடிந்தவரை இந்த டெஸ்ட் போட்டியில் போராடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வர எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்களின் பேட்டிங் சற்று சிறப்பாக இருந்த போதிலும், இங்கிலாந்தின் பவுலர்கள் அதிக அழுத்தம் கொடுத்தார்கள். அதை எங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஆனால் இங்கிலாந்தில் இப்படியாக சில நேரங்களில் நடக்கும். நாங்கள் பேட்டிங்கில் பல்வேறு தவறுகளை செய்தது, அவர்கள் நன்றாக பவுலிங் செய்தது ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்துள்ளது.
இது ஒரு நல்ல பிட்ச். நன்றாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்ய தவறிவிட்டோம். பவுலிங்கிலும் நாங்கள் சரியாக செய்யபடவில்லை.
கடந்த டெஸ்ட் போட்டி தோல்விக்குப் பின்னர் அவர்கள் நன்றாக மீண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்.
அணியில் எப்போதும் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது தான் கீழே வருபவர்கள் நன்றாக ஆட முடியும். அதை செய்ய தவறுகிறோம். எங்கள் அணி கண்டிப்பாக மீண்டு வரும். எங்கள் திறனை நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட்களில் காட்டினோம். மீண்டும் அதைக் காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து மிக அற்புதமாக இந்தப் போட்டியில் விளையாடியதாகவும் இது மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
3வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா, முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
Fantastic ruthless performance from England .. that’s as good as it gets .. To do that after Lords shows great character which comes from the Skipper .. India !!!!! A few days to forget .. they really have been useless !!! #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 28, 2021
பின்னர் ஆடிய இந்தியா மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக செத்தேஷ்வர் புஜாரா, 91 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆட்டம் முடிந்ததை அடுத்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், 'இங்கிலாந்து மிக அற்புதமாக இந்தப் போட்டியில் விளையாடியது. இது மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று. லார்ட்ஸ் மைதான தோல்விக்குப் பின்னர் இப்படியான ஆட்டத் திறனைக் காட்டுவது அவர்களின் பக்குவத்தைக் காட்டுகிறது. குறிப்பாக ஜோ ரூட்டின் பக்குவத்தை எடுத்துக் கூறுகிறது. இந்தியா... அவர்கள் இந்த சில நாட்களை மறந்தாக வேண்டும். அவர்கள் மிகவும் யுஸ்லெஸ்ஸாக இருந்துள்ளார்கள்' என்று விமர்சித்துள்ளார்.
அவரின் இந்தக் கருத்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புதிய பந்தை பயன்படுத்தினர். ஆடுகளமும் சற்று ஈரப்பதமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆனது.
லீட்ஸ்:
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து இறங்கிய புஜாரா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், பொறுமையுடன் ஆடினார். அத்துடன், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து பவுலர்கள் புதிய பந்தை பயன்படுத்தினர். ஆடுகளமும் சற்று ஈரப்பதமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆனது. எனவே, பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். புஜாரா மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் 91 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, ரகானே 10 ரன்கள், ரிஷப் பண்ட் 1 ரன், ஷமி 6 ரன், இஷாந்த் சர்மா 2 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டான சிராஜ், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, 278 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓவர்டன் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி செப்டம்பர் 2ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்டில் ரிஷப்பண்ட் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்யும் போது நடுவர் சொன்ன ஒரு விவகாரத்தைத் தான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
முதல் இன்னிங்சின் போது ரிஷப்பண்ட் பேட்டிங் கிரீஸுக்கு வெளியில் வந்து விளையாடினார் என்றும், அப்படி விளையாடக் கூடாது என்றும் நடுவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இது பற்றி கவாஸ்கர், 'ஒரு பேட்ஸ்மேன் கிரிக்கெட் பிட்ச்சில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அதைத் தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாது' என்றார்.
இதைத் தொடர்ந்து ரிஷப்பண்ட், 'பிட்ச்சில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் எனது கால் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிற்க கூடாது என்று நடுவர் கூறினார். அதனால் தள்ளி நின்றேன்' என்றார். பண்ட் முதல் இன்னிங்சில் 9 பந்துகளே விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்யும் போது நடுவர் சொன்ன ஒரு விவகாரத்தைத் தான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
முதல் இன்னிங்சின் போது ரிஷப்பண்ட் பேட்டிங் கிரீஸுக்கு வெளியில் வந்து விளையாடினார் என்றும், அப்படி விளையாடக் கூடாது என்றும் நடுவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இது பற்றி கவாஸ்கர், 'ஒரு பேட்ஸ்மேன் கிரிக்கெட் பிட்ச்சில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அதைத் தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாது' என்றார்.
இதைத் தொடர்ந்து ரிஷப்பண்ட், 'பிட்ச்சில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் எனது கால் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிற்க கூடாது என்று நடுவர் கூறினார். அதனால் தள்ளி நின்றேன்' என்றார். பண்ட் முதல் இன்னிங்சில் 9 பந்துகளே விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






