என் மலர்
செய்திகள்

ரிஷாப் பண்ட்
பண்ட், ரஹானேவை நீக்குங்கள்... சகா, அஷ்வினை அணியில் எடுங்கள்... டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்
லீட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் படுமோசமாக தோல்வியடைந்த நிலையில், டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதற்கு 2-வது இன்னிங்சில் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியா முன்னிலை பெற்றது முக்கியக் காரணம்.
இன்றுடன் முடிவடைந்த லீட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது முக்கிய காரணம்.
டெஸ்ட் தொடர் தொடங்கியதில் இருந்தே அஷ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ரிஷாப் பண்ட் படுமோசமாக விளையாடி வருகிறார். அவர் ஐந்து இன்னிங்சில் 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 17.40. அதிகபட்சம் 37 ரன்கள் ஆகும்.

ஜடேஜா மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. ரஹானே ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் டுவிட்டர்வாசிகள் அணித்தேர்வை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டுவிட்டரில் ரிஷாப் பண்ட்-க்குப் பதிலாக சகாவை அணியில் சேர்க்க வேண்டும். ரஹானாவை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவ் அல்லது விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கவும். அஷ்வினை அணியில் சேர்க்க வேண்டும். பண்ட்-க்கு கொடுக்கும் வாய்ப்பு சகாவுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என கடுகடுத்து வருகின்றனர்.
Next Story






