என் மலர்
செய்திகள்

விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா
இரண்டு இன்னிங்சிலும் கடைசி 8 விக்கெட்டுகளை 70 ரன்னுக்குள் இழந்து இந்தியா பரிதாபம்
முதல் இன்னிங்சில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 64 ரன்னுக்குள் கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி டாஸ் ஜெயிக்கவில்லை. ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
3-வது டெஸ்டில் விராட் கோலி டாஸ் ஜெயிக்கவா போகிறார்? என ரசிகர்கள் நினைக்க, ஆனால் டாஸ் ஜெயித்துவிட்டார். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
புதுப்பந்தில் ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 21 ரன்னுக்குள் கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி ஆகியோரை இழந்தது. அதன்பின் ஆலி ராபின்சன், சாம் கர்ரன், ஓவார்டன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 78 ரன்னில் சுருண்டது.
21 ரன்னில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா 78 ரன்னுக்குள் ஆல்-அவுட் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 57 ரன்னுக்குள் இழந்தது.
2-வது இன்னிங்சில் புஜாரா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 215 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 278 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 63 ரன்னுக்குள் இழந்தது.

இரண்டு இன்னிங்சிலும் கடைசி 8 விக்கெட்டுகளை 70 ரன்னுக்குள் இழந்து பரிதாபத்திற்கு உள்ளானது. இப்படி இழப்பது இந்திய அணிக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன் 1952-ல் மான்செஸ்டரிலும் இதுபோன்று பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
மான்செஸ்டரில் 5 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா முதல் இன்னிங்சில் 58 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் 55 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 82 ரன்னில் சுருண்டு ஆல்-அவுட் ஆனது.
Next Story






